NO:1.. அசத்திப்புட்டாரே ஹைதர் அலி.. பிரதமர் மோடிக்காக ஸ்பெஷல் "ஏலக்காய்" கிரீடம்.. அதென்ன மாலை.. செம
பெங்களூரு: பிரதமர் மோடியின் இன்றைய கர்நாடக பிரச்சாரம் பலரால் கவனிக்கப்பட்டு வருகிறது.. இது தொடர்பாக 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
கர்நாடகாவில் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.. இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.. 3 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகா சென்றுள்ள பிரதமர், இன்று பெங்களூரில் பிரமாண்ட பேரணியையும் மேற்கொண்டார்.
காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 26 கிலோமீட்டர் தொலைவில், திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.. அப்போது தொண்டர்களுக்கு கையை காட்டி, உற்சாகத்துடன் ஓட்டு சேகரித்தார்.

பூரிப்பு முழக்கம்: மோடியை பார்த்ததுமே, தொண்டர்கள் குஷியாகி, மோடி... மோடி... என்று பூரித்து முழக்கமிட்டனர்.. பலர் அனுமன் வேடமிட்டும், அனுமன் மாஸ்க் அணிந்தும், மோடியின் இந்த பேரணியில் பங்கேற்றனர்... பிறகு ஒரு இடத்தில், திடீரென்று அனுமன் சிலை கண்ணில் பட்டதுமே, ஒருசெகண்ட் திகைத்து பார்த்த பிரதமர், இரு கைகளையும் கும்பிட்டு வணங்கினார்.
அனுமன் பக்தர்கள்: பிரச்சார வாகனம் அந்த அனுமன் சிலையை கடந்த பிறகும்கூட, திரும்பி திரும்பி பார்த்த மோடி, அனுமன் சிலையை வணங்கியபடி இருந்தார். இதை பார்த்த தொண்டர்கள் மேலும் உற்சாகமாகி, ஜெய் மோடி, ஜெய் அனுமன், பாரத் மாதகீ ஜெய், மோடி மோடி, பஜ்ரங்பாலி என்றெல்லாம் கோஷங்களை எழுப்பினார்கள்.. பிரதமர் மோடி அனுமன் சிலையை பார்த்து கைகூப்பி வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதேபோல ஒரு கிரீடம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹாவேரி மாவட்டத்திற்கு செல்கிறார் பிரதமர்.. அப்போது அவருக்கு ஏலக்காயால் உருவாக்கப்பட்ட மாலை மற்றும் கிரீடம் அணிவிக்கப்படுகிறது... இவற்றை முழுக்க முழுக்க தயாரித்தது, இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.... ஹாவேரி என்ற இடம், ஏலக்காய் போன்ற வாசனை பொருட்களுக்கு பெயர் பெற்றது..

ஈர்ப்பு சபாஷ்: இந்த மாவட்டத்தின் கலாச்சார அடையாளமே ஏலக்காய் தான்.. படவேகரா குடும்பம் ஏலக்காயில் தலைப்பாகை மற்றும் மாலையை உருவாக்கி இருக்கிறார்கள்.. ஹைதர் அலி என்ற கலைஞர்தான், மோடிக்காக இந்த சிறப்பு தலைப்பாகையை உருவாக்கி உள்ளார். எப்போதுமே பிரதமரின் உடை அலங்காரம் பலரால் உற்றுகவனிக்கப்படும்.. அந்தவகையில், இந்த ஏலக்காய் கிரீடமும் பலரது கவனத்தை இப்போதே ஈர்த்து வருகிறது..!!












Click it and Unblock the Notifications