கர்நாடகா, மகாராஷ்டிராவில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு! சுகாதாரத்துறை வார்னிங்
பெங்களூர்: பன்றி காய்ச்சல் பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மற்றும், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
பொதுவாக மழைக்காலங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும். அதேபோல இந்த பருவமழை காலத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கிறது. பன்றிக்காய்ச்சல் H1N1 வைரஸ் மூலம் பரவுகிறது. இதனை இன்ஃப்ளூயன்ஸா என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் மிசோரத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் இந்த தொற்று பரவல் வேகமெடுத்திருக்கிறது.

கர்நாடகாவை பொறுத்தவரை கடந்த ஜூலை 31ம் தேதி வரை, 855 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7 மடங்கு அதிகமாகும். உயிரிழப்புகளை பொறுத்தவரை 5ஆக பதிவாகியுள்ளது. இது குறித்து, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் அன்சார் அகமது கூறுகையில், "நாங்கள் தொற்று பாதிப்பு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பெங்களூரில் தொற்று பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மருத்துவமனைகளில், ஒரு நாளைக்கு சராசரியாக 30 பேர் வருகிறார்கள் எனில், அதில் 20 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறது. H1N1 பாதிப்பை ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கண்டறிய முடியும். காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சோர்வு மற்றும் தலைவலி என சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளே இருக்கும். ஆனால் உரிய சோதனை செய்வதன் மூலம்தான் இதனை உறுதி செய்ய முடியும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த அளவில், இந்த பாதிப்பு 70% அதிகரித்துள்ளது. இதுவரை 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கி தற்போது வரை இம்மாநிலத்தில் 1,402 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இந்த பாதிப்பு 821ஆக இருந்தது. எனவே சுகாதாரத்துறை தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள், இணை நோய் உள்ளவர்கள், மூத்த குடிமக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவையை வழங்குவதை உறுதி செய்திருக்கிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications