கர்நாடகா துணை முதல்வர்.. டிகே சிவக்குமார் கேட்டு வாங்கிய "தமிழ்" ஐஏஎஸ்! மாஸ்டர்மைண்ட்! யாரிந்த சோழன்
பெங்களூர்: கர்நாடகாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். உதாரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சி தலைவர்களாக தமிழர்கள் உள்ளனர். அதேபோல் உத்தர பிரதேசத்தில் முக்கிய ஐபிஎஸ் பதவிகளை தமிழர்கள்தான் வகித்து வருகின்றனர்.

உதாரணமாக தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான ஐபிஎஸ் அதிகாரி முனிராஜ் உத்தர பிரதேசத்தில் முக்கியமான பொறுப்பு வகித்து வருகிறார். உத்தர பிரதேச எல்லையில் டெல்லிக்கு அருகில் உள்ள காஜியாபாத். சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கும் உத்தர பிரதேச மாவட்டங்களில் இதுவும் ஒன்று.
காஜியாபாத் மாவட்டத்தின் புதிய எஸ்.எஸ்.பியாக இவர் பணியாற்றி வருகிறார். உத்தர பிரதேசத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும் அதிகாரிதான் ஜி.முனிராஜ். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் உத்தர பிரதேசத்தில் மிக முக்கியமான ஐபிஎஸ் அதிகாரியாக உருவெடுத்து இருக்கிறார். முதலில் பொறுப்பு எஸ்.எஸ்பி அதிகாரியாகவே முனிராஜ் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவர் வந்த சில வாரங்களில் காஜியாபாத்தில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தடுத்து பல ரவுடிகள், கொலையாளர்கள், ரேப்பிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். ஜி.முனிராஜ் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்பட்டன. முக்கியமாக இவர் மேற்கொண்ட என்கவுண்டர் நடவடிக்கைகள் அதிகம் கவனிக்கப்பட்டது .
அங்கு ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. இந்த கட்டுமானம் முடிந்த பின் அங்கு மிகப்பெரிய அளவில் கோவில் திறப்பு விழா நடக்க உள்ளது. இதற்காக பல மாநில தலைவர்கள், பாஜக நிர்வாகிகள் அங்கே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை பாஜக மிக பிரமாண்டமாக நடத்த உள்ளது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த நிகழ்வு நடக்க உள்ளது. அதனால் நிகழ்வை இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மிகம் + அரசியல் கலந்த நிகழ்வாக நடத்த பாஜக திட்டமிட்டு இருக்கிறது. கோவில் திறப்பதற்கு முன் 1 மாதத்திற்கு மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளும் நடக்க உள்ளன. இந்த நிலையில்தான் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஜி.முனிராஜ் ஐபிஎஸ் அதிகாரியை யோகி ஆதித்யநாத் இந்த மாவட்டத்தின் எஸ்எஸ்பி அதிகாரியாக நியமனம் செய்துள்ளார்.
கர்நாடகா அதிகாரி: இதேபோல்தான் தற்போது கர்நாடகாவிலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாரின் செயலராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த இவர் 2008 பேட்ச் அதிகாரி ஆவார். கர்நாடக கேடராக பணியில் சேர்ந்து அங்கு பணியாற்றி வந்தார் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக இருந்துள்ளார். கொரோனா சமயத்தில் பெங்களூர் சிறப்பு கமிஷனராக இருந்து சிறப்பாக செயலாற்றினார். இவர் கடந்த தேர்தலில் மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
பெங்களூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனராகவும் சிறப்பாக ராஜேந்திர சோழன் பணியாற்றி இருக்கிறார். இதையடுத்து தற்போது கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமாரின் செயலராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமிக்கப்பட்டுள்ளார் டி கே சிவகுமார் இவர்தான் வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொண்டதன் பெயரில் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications