ஸ்டாலின்.. சோனியா.. மம்தா.. கெஜ்ரிவால்.. பெங்களூரில் குவியும் தலைவர்கள்.. பேனர்களை கவனிச்சீங்களா?
பெங்களூர்: எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில், இதற்கான இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக அவர்களின் உருவம் அச்சிடப்பட்ட பேனர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டல் முன்பாக வைக்கப்பட்டிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது முறையும் பாஜக வெற்றிப் பெற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிரக்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெறும் பெங்களூருவின் தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டல் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தனித்தனி உருவப்படங்கள் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications