அங்கன்வாடி பணியாளர்களுக்கு உருது கட்டாயம்.. சர்ச்சையில் முடிந்த கர்நாடக அரசின் ஷாக் முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா போன்ற மாநிலத்தில் மொழி எப்போதுமே ஆழமான பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. கர்நாடகா போன்ற மாநிலத்தில் மொழி ரீதியாக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மிக முக்கியமானது. முக்கியமாக அந்நிய மொழி ஒன்றை திணிக்கும் முன் மிக கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் முடிகெரே மற்றும் சிக்கமகளூருவில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு உருது மொழியை கட்டாயமாக்கி உள்ளது கர்நாடக அரசு.

உருது மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று புதிய அளவுகோலை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் விதித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே எதிர்ப்புகள் மற்றும் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ள இந்த முடிவு அங்கே கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மாநிலத்தின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்தும் முயற்சியாக மட்டும் இது இல்லாமல், கர்நாடகத்தின் ஒருமைப்பாட்டை சேதப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

karnataka

சர்ச்சைக்குரிய நடவடிக்கை:

கணிசமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி ஆசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு உருது புலமையை கட்டாயமாக்கும் மாநில அரசின் அறிவிப்பால்தான் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. முஸ்லீம் சமூகம் 31.94% வாழும் முடிகெரே மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டதுதான் சர்ச்சைக்கே காரணம். ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சொல்வதை விட.. அரசியலுக்காக மதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றே பார்க்க வேண்டும்.

அரசின் இந்த உத்தரவு, விமர்சனங்களை சந்தித்துள்ளது.. குறிப்பாக பாஜகவிடம் இருந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்துள்ளது. இது மாநிலத்தின் மொழி ஒற்றுமையை சீர்குலைக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மதத்தை சேர்ந்த மக்களுக்கு அதீத முன்னுரிமை, வேலைவாய்ப்பு கொடுக்கும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவு ஆபத்தானது. பலதரப்பட்ட மக்களுக்கு எதிரானது.

முன்னாள் எம்பி நளின் குமார் கட்டீல் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நடவடிக்கையை "முஸ்லிம் திருப்திப்படுத்தும்" முயற்சி என்று விமர்சித்து உள்ளனர். சொந்த மாநிலத்தில் கன்னடம் பேசும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை மறுக்கும் மோசமான நடவடிக்கை இது என்று பாஜக விமர்சனம் வைத்துள்ளது.

மொழியியல் பெருமையின் வரலாற்றைக் கொண்ட மாநிலம்:

கர்நாடக அரசியலில் மொழிப் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வருகிறது. கன்னடத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எதையும் அம்மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பை அந்த மாநிலம் பதிவு செய்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் கன்னட மொழிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உருது மொழி திணிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தின் ஆட்சி மொழியான கன்னடத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் உருது மொழி அங்கே திணிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் பல மொழிகள் உள்ளன.. அம்மாநிலம் அதன் மொழியியல் பன்முகத்தன்மையில் பெருமை கொள்கிறது. அப்படிப்பட்ட மாநிலத்தில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் மொழியாக கன்னடம் உள்ளது. அப்படிப்பட்ட கன்னடத்தை விட.. உருது மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் முடிவானது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் கூட, இந்த விவகாரம் கவலையை எழுப்புகிறது. கன்னட சார்பு குழுக்கள் ஏற்கனவே இதற்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள தொடங்கி உள்ளன. கன்னட மக்கள் இடையே கடுமையான எதிர்ப்புகளை இந்த முடிவு சந்தித்துள்ளது.

மொழியியல் ரீதியாக மக்களை இடையே பிரிவினையை ஏற்படுத்துவது:

மற்ற இந்திய மாநிலங்களில் இருந்து மக்கள் கர்நாடகா நோக்கி செல்வது வழக்கம்.. குறிப்பாக பெங்களூர் போன்ற நகர்ப்புறங்களை நோக்கி பலர் குடியேறி வருகிறார்கள். இப்படி புலம்பெயர்ந்தவர்களில் பலர் இந்தி, தெலுங்கு, தமிழ் அல்லது மராத்தி பேசுகிறார்கள், மாநிலத்தின் மொழியியல் பன்முகத்தன்மைக்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வரலாற்று ரீதியாக இந்தி திணிப்பை எதிர்த்த ஒரு அரசாங்கம் இப்போது அங்கே ஆட்சியில் இருக்கிறது. இப்படி பல மொழிகள் கொண்ட மாநிலத்தில் திடீரென உருது திணிக்கப்படுவது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அளவுக்கு மொழியியல் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மாநிலத்தில் அங்கன்வாடி ஆசிரியர் விண்ணப்பதாரர்களுக்கு உருது புலமையை கட்டாயமாக்கும் மாநில அரசின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆணை ஆபத்தான முன்னுதாரணமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அந்த வேலைக்கு நல்ல திறன் கொண்டவர்கள், அல்லது தகுதியுடையவர்கள் உருது மொழி தெரியாத காரணத்தால் வேலைக்கு சேர முடியாத நிலை ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே இந்த வேலையில் சேரும் சூழல் ஏற்படும். இந்த மாவட்டங்களில் உள்ள கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையை மட்டும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மற்ற மக்கள் இடையே அதிர்ச்சியை, விமர்சனங்களை சந்தித்துள்ளது.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு உருது ஏன் அவசியம்?:

அங்கன்வாடி பணியாளர்கள் என்பவர்கள் சாதாரணமான மக்கள் இல்லை... அரசு திட்டங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் இடையே இவர்கள் மிகப்பெரிய இணைப்பு பாலமாக உள்ளனர். உள்ளூர் மக்களுடன் நெருங்கிய உறவு பாராட்ட வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உள்ளூர் மொழியான கன்னடம் அவசியம். அப்படிப்பட்ட பணிக்கு உருது கட்டாயம் என்பது மிகப்பெரிய தவறான முடிவு. முக்கியமாக அரசுக்கும் - பொதுமக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை துண்டிக்கும் செயலாகும் இது.

சிறுபான்மைச் சமூகங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்வது நோக்கமாக இருந்தாலும், அது மற்ற மக்களுக்கு பிரச்சனையாக மாறும் என்பதை கூட யோசிக்காமல் இந்த முடிவை காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. எல்லோரும் அரசால் பயன் அடைய வேண்டும் என்றால்.. கன்னடத்தில் புலமை முதன்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் மட்டும் பயன் அடையும் வகையில் உருதுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த முடிவை எடுத்துள்ளனர்.

முடிவுரை: அரசு எடுத்த தவறான முடிவு

அங்கன்வாடி ஆசிரியர்களுக்கு உருது மொழியை கட்டாயமாக்கும் சித்தராமையா அரசின் நடவடிக்கையானது, கர்நாடகாவின் நுட்பமான மொழியியல் மற்றும் சமூக சமநிலையை சீர்குலைக்கும் அபாயகரமான முடிவு.. சிந்தனையற்ற கொள்கை. கன்னடத்தை விட ஒரு சிறுபான்மை மொழிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், காங்கிரஸ் அரசாங்கம் அதன் பெரும்பான்மையான மக்களை அந்நியப்படுத்தும் முடிவை எடுத்து உள்ளது. மொழிவாரித் திணிப்பை தொடர்ந்து எதிர்க்கும் மாநிலத்தில், இந்த முடிவு பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்ல, ஆபத்தான விஷயமாகவும் மாறலாம்.

மொழியியல் பெருமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை கொண்ட கர்நாடகாவை பின்னோக்கி கொண்டு செல்லும் நடவடிக்கை இது. மக்களை பிளவுபடுத்தும் திட்டம் இது. கன்னடம் போன்ற ஆழ்ந்த மொழி ஒன்று இருக்கும் போது உருது மொழிக்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவம் அதிர்ச்சி தரக்கூடியது.. ஆபத்தானது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+