வீட்டில் சும்மாவே இருந்த கணவன்.. வேலைக்கு போக வைக்க ஆசைப்பட்டு.. ஜெயிலில் கம்பி எண்ணும் மனைவி
பெங்களூரு: எந்த வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மாவே சோம்பேறியாக சுற்றிக்கொண்டிருந்த கணவரை வேலைக்கு போக வைக்க வித்தியாசமாக சிந்தித்த பெண, அதற்காக செய்த செயலால் தற்போது பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுகிறார். அப்படி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
வடிவேலு ஒரு படத்தில் சும்மாவே இருப்பார், அவரை வேலை செய்ய வைக்க மனைவி பல முயற்சி செய்வார். ஆனால் கடைசி வரை வேலைக்கு போக மாட்டார். இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த பெண், மல்லேசுவரம் போலீஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில், தான் ஸ்கூட்டரில் வெளியே சென்றேன். செல்லும் வழியில் சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றேன். அப்போது மர்மநபர்கள் எனது ஸ்கூட்டரை திருடி சென்றுவிட்டார்கள். அந்த ஸ்கூட்டரில் தங்க நகைகள் இருந்தன என்று புகார் மனுவில் கூறியிருந்தார்
இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, புகாரின் உண்மை தன்மை குறித்தும் பெண்ணின் நடவடிக்கை குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மல்லேசுவரம் போலீசார், அந்த பெண்ணை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் போலீஸையே அதிர வைதுள்ளது. அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில், என் கணவர், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார் இதனால் வருமானம் இன்றி நாங்கள் தவித்தோம். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை வேலைக்கு செல்ல வைக்க திட்டமிட்டேன்,.
அதாவது என் திட்டப்படி, நகைகள் திருட்டு போனதாக கூறினால் கணவர் வேலைக்கு செல்வார் என்று நினைத்தேன், இதையடுத்து தனது திட்டப்படி, வங்கி லாக்கரில் இருந்த எனது நகைகளை நண்பர் தனஞ்ஜெய் மற்றும் அவரது கூட்டாளி ராகேஷ் ஆகியோர் உதவியுடன் திருடிவிட்டு போலீசில் பொய்யான புகார் அளித்தேன் என்றார்.
இதையடுத்து சொந்த நகைகளை திருடிய பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த தனஞ்ஜெய் மற்றும் ராகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சும்மாவே இருந்த கணவனை வேலைக்கு போக வைக்க ஆசைப்பட்டு கடைசியில் சிறையில் கம்பி எண்ணுகிறார் மனைவி.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications