கர்நாடகாவில் 'ஆபரஷேன் லோட்டஸ்' தயாராகிறதா பாஜக?.. மத்திய அமைச்சர் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெரும்பாலானவை கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. இந்த நிலையில், கருத்துக் கணிப்புகள் பொய்யாகும் என்று பாஜக கூறியுள்ளது.
224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

மொத்தம் 73 சதவிகித வாக்குகள் பதிவானது. தற்போது ஆட்சியில் உள்ள பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அதேபோல், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 209 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 133 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் கணிசமான செல்வாக்கை கொண்டு இருப்பதால் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், வரும் சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதற்கிடையே, நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. இதில் கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறின. இதனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் காங்கிரஸ் கட்சி தற்போதே உற்சாகம் அடைந்துள்ளது.
இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது போல் அல்லாமல் பாஜக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஷோபா கூறுகையில், "நீங்கள் சொல்லும் ஆபரஷேன் லோட்டஸ் எல்லாம் கர்நாடகாவில் தேவைப்படாது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இருக்காது என்பது உறுதி செய்யப்படும். பாஜக 120-125 இடங்களில் வெற்றி பெறும்.

இந்த முறை கர்நாடக மக்கள் வளர்ச்சிக்காக வாக்களித்து இருக்கிறார்கள். எனவே எங்களுக்கு மெஜாரிட்டி எளிதாக கிடைக்கும்" என்றார். ஆட்சியை பிடிக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையென்றால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி பாஜக ஆட்சியை பிடிப்பதாகவும் இதற்காக ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பணத்தை வாரி இறைத்து திட்டம் தீட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
கர்நாடகாவில் கடந்த முறை குமரசாமி ஆட்சியை பாஜக ஆபரேஷன் லோட்டஸ் மூலம் கவிழ்த்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இந்த நிலையில் தற்போது தொங்கு சட்ட சபைக்கே கர்நாடகாவில் வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மக்களின் உண்மையான தீர்ப்பு என்ன என்பது மே 13 ஆம் தேதிதான் தெரிய வரும்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications