பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும்.. கர்நாடகாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூர்: கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பெங்களூரில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்திருந்த நிலையில், தற்போது போலீசார் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பெங்களூர் குண்டனஹல்லி பகுதியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த 1ம் தேதியன்று மதியம் 1 மணி அளவில் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்தபோது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

ஆரம்பத்தில் சிலிண்டர் வெடித்ததாக சொல்லப்பட்டாலும், வெடித்தது வெடி குண்டு என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஒயிட் ஃபீல்ட் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடயவியல் துறை அதிகாரிகள், வெடிகுண்டு தடுப்புப் படை அதிகாரிகள் ஆகியோரும் தடயங்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணையையும், ரெய்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் என பல்வேறு தரப்பினருக்கும் மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications