நித்யானந்தாவுக்கு மேலும் சிக்கல்.. சொத்துப்பட்டியலை கேட்டு பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு: நித்யானந்தாவிற்கு ஜாமீன் அளித்தவர்கள், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் உள்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் கர்நாடகா சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சாமியார் நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நித்தியானந்தா மீது அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பல நிபந்தனைகளுக்கு பின்னரே நித்தியானந்தாவிற்கு ஜாமீன் வழங்கியது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
இந்நிலையில் சாமியார் நித்யானந்தா இந்தியாவைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பெங்களூரு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதால் அவரை கைது செய்ய போலீசாரால் இயலவில்லை.
இந்நிலையில் நித்யானந்தாவிற்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தாவிற்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் பட்டியலையும், 2 வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு கர்நாடக மாநில சிஐடி போலீசாருக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பல வாரங்களாக நேரில் ஆஜராகாத நித்யானந்தா மற்றும் அவர் தரப்பினருக்கு, இனியும் விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, தொடர்ந்து நித்யானந்தா மட்டுமின்றி, அவருக்கு ஜாமீன் மற்றும் அடைக்கலம் கொடுத்த அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications