"உண்மை விரைவில் வெல்லும்”! 3000+ ஆபாச வீடியோ.. பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா பரபர பதிவு!
பெங்களூர்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, "உண்மை வெல்லும்" எனக் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33), தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் மீண்டும் களமிறங்கினார். கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வலைதளங்களில் வெளியாகின.

பிரஜ்வல் ரேவண்ணா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 25 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஹாசன் போலீசார் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும், தேவகவுடாவின் மூத்த மகனும், பிரஜ்வலின் தந்தையுமான எம்எல்ஏ ரேவண்ணாவின் வீட்டில் வேலை செய்த 48 வயது பெண், காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலுக்கும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். அதன் பேரில், ரேவண்ணா, பிரஜ்வல் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை குழு தலைவர் பி.கே.சிங் தலைமையிலான அதிகாரிகள் ஹாசனில் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே பிரஜ்வல், ஜெர்மனிக்கு தப்பி ஓடியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் உடனடியாக நாடு திரும்புமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மஜத மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தலைமையில் கட்சி எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. அப்போது, பிரஜ்வலுக்கு எதிராக ஏராளமான பெண்கள் புகார் கொடுத்துள்ளதால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து பிரஜ்வல் நீக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதால், அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா, தான் தற்போது பெங்களூரில் இல்லை என்றும், விரைவில் விசாரணைக்கு ஆஜராவேன் என்றும் தனது வழக்கறிஞர் மூலமாக பெங்களூர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
"நான் தற்போது பெங்களூரில் இல்லாததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூர் சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பிரஜ்வல் ரேவண்ணா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக, 'எக்ஸ்' பக்கத்தில் தனது பதிவுக்கு யாரும் கமெண்ட் செய்ய முடியாதபடி செட்டிங்ஸ் மாற்றிவிட்டு இந்த பதிவை வெளியிட்டுள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications