அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் ...கொடி கட்டினா என்ன...டிடிவி தினகரன் நச்
பெங்களூரு : அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தான் இருக்கிறார். அவரது காரில் கட்சி கொடி பொருத்தப்பட்டதில் என்ன தவறு உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவர் பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தியே அதே காரில் சசிகலா வெளியே வந்தார். அவரது காரில் அதிமுக கட்சி கொடி பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இல்லாத சசிகலா எவ்வாறு கட்சி கொடியை பயன்படுத்தலாம். இது சட்டப்படி குற்றம் என ஜெயக்குமார் கூறி இருந்தார்.

இது பற்றி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான். அதனால் தான் அதிமுக கொடி காரில் பொருத்தப்பட்டது. இதில் என்ன தவறு உள்ளது. சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது . அதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுகவை மீட்டெடுக்கதான் அமமுக தொடங்கப்பட்டது என்றார்.

மேலும் பிப்ரவரி 7-ந் தேதிக்கு பின்னரே சசிகலா தமிழகம் வருகிறார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications