தலைகீழா மாறுதே! போன வாரம் காங்கிரஸ்.. ஆனால் இப்போ? கர்நாடகாவில் அரியணை ஏறும் பாஜக?டிவி9 புது சர்வே
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டியை பெற வாய்ப்புள்ளது என கடந்த மாதம் வெளியான டிவி9 கன்னடா-சி வோட்டர் கருத்து கணிப்பு கூறியது. இந்நிலையில் தான் ஒரு வாரத்துக்குள் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது மே முதல் வாரத்தில் டிவி 9 நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு பாஜகவுக்கு சாதகமாகவும், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அடி விழலாம் எனவும் தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையே கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
கடந்த மாதம் முதல் பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வரிசையாக வெளி வருகின்றன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு பல கருத்து கணிப்புகள் சாதகமாக இருந்தன. குறிப்பாக கர்நாடகாவில் முன்னணி சேனல்களில் ஒன்றாக உள்ள டிவி 9 கன்னடா, சி வோட்டருடன் சேர்ந்து கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி கர்நாடகாவில் 106 முதல் 116 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தனி மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தான் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக 3 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு தெரிவித்தது. மாறாக பாஜக 79 முதல் 89 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 24 முதல் 34 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் டிவி 9 கன்னடா சார்பில் மே மாதம் முதல் வாரத்தில் புதிய சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி டிவி 9 கன்னடா, சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பின் முந்தைய முடிவு என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. அதாவது பாஜக மெஜாரிட்டியை நெருங்கும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் சறுக்கலை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மே முதல் வார டிவி 9 சர்வேயின்படி பாஜக 105 முதல் 110 இடங்களில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டிக்கு 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் பாஜக 110 இடங்களில் ஜெயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்க உற்சாகத்தை அளித்துள்ளது.
மாறாக காங்கிரஸ் கட்சி 90 முதல் 97 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வென்ற நிலையில் இது அதிகம். இருப்பினும் டிவி 9 கன்னடா-சி வோட்டர் கருத்து கணிப்பில் வெளியான முடிவை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சி 116 இடங்களில் வெற்றி பெறும் என கூறியிருந்தது. அதனை ஒப்பிடும்போது தற்போது காங்கிரஸ் கட்சி பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.
அதேபோல் ஜேடிஎஸ் கட்சி 19 முதல் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் னெ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சர்வேயில் பங்கேற்றவர்களல் 44 சதவீதம் பேர் பாஜகவுக்கு ஓட்டளிக்க உள்ளதாகவு்ம, 33 சதவீதம் பேர் காங்கிரஸ் கட்சிக்கம், 14 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சிக்கும், 5 சதவீதம் பேர் மற்றவர்களுக்கு ஓட்டளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதாக டிவி 9 சேனலின் மே முதல்வார தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் வரை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த மக்கள் தற்போது பாஜகவின் பக்கம் சாய்ந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் பிரசாரம் முக்கிய காரணமாக இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications