தொங்கு சட்டசபை.. கர்நாடகா சிஎம்மாக யார் வேண்டும்? சர்வேயில் பாஜக, காங்கிரசுக்கு ‛நோ’..அப்போ யாரு?
பெங்களூர்: கர்நாடகாவில் டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் நடந்துள்ளன. இதில் தொங்கு சட்டசபை அமைந்தால் யார் முதல்வராக வர வேண்டும் என்ற கேள்விக்கு பொதுமக்கள் பாஜக, காங்கிரஸ் தலைவர்களை புறம்தள்ளி புதிதாக ஒருவரின் பெயரை அதிகமாக கூறியுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்பட ஏராளமான கட்சிகள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் கூட நேரடி போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தான் இருக்கிறது.
அதேநேரத்தில் நாம் முன்னாள் பிரதமரான தேவேகவுடாவின் மகனும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான ஜேடிஎஸ் கட்சியை புறம்தள்ளிவிட முடியாது. ஏனென்றால் கர்நாடகாவை பொறுத்தமட்டில் கிங்மேக்கராகி முதல்வர் பதவியை ஜேடிஎஸ் கட்சி தட்டி சென்ற வரலாறு உள்ளது.

அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜகவுக்கு அதிக செல்வாக்கு உள்ள கட்சிகளாக உள்ளன. இதனால் தேர்தலில் வெற்றி பெற்று இந்த கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும். மாறாக இந்த கட்சிகளுக்கு ஆட்சியை கைப்பற்ற தேவையான 113 தொகுதிகள் கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஜேடிஎஸ் கட்சியை அரவணைத்து ஆட்சியை பிடிப்பதில் எப்போதும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவும்.
அந்த வகையில் தான் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ், பாஜகவுக்கு தனித்து ஆட்சியமைக்க தேவையான 113 இடங்கள் கிடைக்காது என பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தொங்குசட்டசபை உருவாகலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இது நடந்தால் மீண்டும் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாறும் என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் முன்னணி சேனலாக உள்ள டிவி 9 கன்னடா, சிவோட்டருடன் சேர்ந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்பில் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் யார் முதல்வராக வேண்டும்? என்பதன் அடிப்படையில் மக்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களை மக்கள் விரும்பவில்லை.
அதாவது ‛‛மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்து காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தால் யார் முதல்வராக வேண்டும்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 50.2 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி தான் முதல்வராக வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என்று 31.4 சதவீதம் பேர் கூறியுள்ள நிலையில் கருத்து இல்லை என 10.4 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், ‛‛கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்து காங்கிரஸ்-பாஜக கட்சிகள் கூட்டணி அமைந்தால் யார் முதல்வராக வேண்டும்?'' என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இதற்கு 49.2 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமியின் பெயரை 49.2 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மாறாக 33.5 சதவீதம் பேர் பாஜகவை சேர்ந்தவர் முதல்வராகலாம் என கூறியுள்ளனர். அதேவேளையில் 17.2 சதவீதம் பேர் கருத்து கூறவிரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சியினரை காட்டிலும் ஜேடிஎஸ்ஸின் குமாரசாமி முதல்வராக வேண்டும் என்றே அதிகமான மக்கள் விரும்புகின்றனர் என டிவி 9 கன்னடா மற்றும் ச வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications