Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சுகர் பேபி.." 19 வயது திருப்பூர் மாணவி பெங்களூர் கூட்டு பலாத்கார வழக்கில் ட்விஸ்ட்! என்ன நடக்கிறது!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் திருப்பூரைச் சேர்ந்த மாணவி கூட்டுப் பலாத்கார வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், அந்த மாணவி மீது முன்பே புகாரளித்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அந்த நபர் ஏற்கனவே புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் படித்து வருகிறார். அவர் சமீபத்தில் போலீசில் புகாரளித்திருந்தார். அதில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு பங்களாவுக்குத் தன்னை அழைத்துச் சென்று இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகாரளித்திருந்தார். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.

Twist in Tirupur student Bangalore assault Case Accused first lodged Extortion Money complaint

பெரிய ட்விஸ்ட்

அதில் தான் பெரிய ட்விஸ்ட் நடந்துள்ளது. அதாவது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே அந்த மாணவி மீது புகாரளித்துள்ளது தெரிய வந்துள்ளது. 19 வயது கல்லூரி மாணவியும், பத்திரிகையாளர் என கூறிக்கொண்ட ஒருவரும் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தாக அந்த நபர் புகார் அளித்திருப்பது போலீஸ் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

புகார்

குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் பிப்ரவரி 21ம் தேதி புகாரளித்துள்ளார். அதில், அந்தப் பெண்ணும், இம்ரான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபரும் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறியுள்ளார். பணம் கொடுக்க மறுத்தால் புகார் அளிப்போம் என மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதாவது அந்த திருப்பூர் பெண் பாலியல் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு ஒரு நாள் முன்னதாகவே, இந்தப் புகார் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

அந்த நபர் தனது புகாரில், "நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசிப்பதாகவும், ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் பழைய கார்களை வாங்கி விற்று வரும் பிஸ்னஸ் நடத்தி வருகிறேன். மேலும், ஜக்கூரில் ஒரு குத்தகை பங்களாவில் சிறிய பங்ஷன்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான், எனது நண்பர் பிப்ரவரி 14 முதல் 16 வரை காதலர் தினக் கொண்டாட்டத்திற்காகப் பங்களாவை முன்பதிவு செய்தார்..

அதிகாலை 4 மணி

பிப்ரவரி 14 அன்று அதிகாலை 2 மணியளவில் தான் நான் பங்களாவுக்கு சென்றேன். அப்போது அங்கே அந்தப் பெண்ணைச் சந்தித்ததேன். விருந்தின் போது அந்தப் பெண் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் நெருங்கிப் பழக முயன்றார். அப்போதே அதை நான் தடுத்துவிட்டேன். விருந்து முடிந்தவுடன் அதிகாலை 4 மணியளவில் தன்னை வீட்டில் இறக்கி விடுமாறு அந்தப் பெண் சொன்னார்..

சுகர் பேபி

அப்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, தன்னை ஒரு "சுகர் பேபி" என்று கூறி, "சுகர் டாடி"யைத் தேடி கொண்டிருப்பதாகவும், யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் என என்னிடமே கேட்டார். நான் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு பேக்கரி அருகே அவரை இறக்கிவிட்டேன். இந்தச் சூழலில் தான் பிப்ரவரி 18ம் தேதி அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் விருந்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக என்னைக் குற்றஞ்சாட்டினார்.

அதன் பின் செய்தியாளர் எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். இந்த விவகாரத்தில் மிரட்டி பணம் பறிக்க முயன்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+