பிரஜ்வல் விவகாரம்.. 3000 ஆபாச வீடியோவை பரப்பியதாக பாஜகவை சேர்ந்த இருவர் கைது! பரபரக்கும் கர்நாடகா
பெங்களூர்: ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்களை கசியவிட்டதாக பாஜகவைச் சேர்ந்த இருவரைச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம் மிகப் பெரிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அங்கு ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

சரியாக அங்குத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பிரஜ்வல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரஜ்வல் விவகாரம்: இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அவரது பென் டிரைவில் இருந்த வீடியோக்களை லீக் செய்த குற்றச்சாட்டில் பாஜகவை சேர்ந்த இருவரைச் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட அவர்கள் சேதன் மற்றும் லிகித் கவுடா என்றும் அவர்கள் பாஜகவைச் சேர்ந்த தொண்டர்கள் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் வீடு அமைந்துள்ள யெலகுண்டா மற்றும் ஷ்ரவணபெலகோலா பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்ற போலீசார் அங்கும் விசாரணையைத் தொடர்ந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பென் டிரைவில் இருந்த ஆபாச வீடியோக்கள் கர்நாடகாவில் கடந்த மாதம் இறுதியில் பரவியது. அங்கு ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோக்கள் பரவின.
"கெஞ்சியும் விடவில்லை.." 60 வயது பணிப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த பிரஜ்வல்! புதிய வழக்குப்பதிவு
பலாத்காரம்: அதில் மொத்தம் 2,900க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஹாசன் எம்பி பிரஜ்வல் பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோக்களை கொண்ட பென் டிரைவ் தான் லீக் ஆகி இருக்கிறது. அங்குத் தேர்தல் நடக்கும் சில நாட்களுக்கு முன்பு ஹசானில் பலருக்கும் அந்த வீடியோ பரவி உள்ளது. விரைவில் அதில் சமூக வலைத்தளங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.
இது கர்நாடக அரசியலில் மிகப் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கக் கர்நாடக காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அதேநேரம் இந்த வழக்கை விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், இந்த வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கைது: இந்த வீடியோக்களை பரப்பியது காங்கிரஸ் தலைவர்கள் தான் பங்கு இருப்பதாக பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சூழலில் தான் வீடியோக்களை வெளியிட்டதாக பாஜகவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரஜ்வல்: இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரைப் புகார் அளிக்க விடாமல் கடத்திய புகாரில் பிரஜ்வல் தந்தை ரேவண்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் தந்தை ரேவண்ணா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications