"கெஞ்சியும் விடவில்லை.." 60 வயது பணிப்பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்த பிரஜ்வல்! புதிய வழக்குப்பதிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வீட்டில் வேலை செய்து வந்த 60 வயதான பணிப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹாசன் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மற்றொரு வழக்கை போலீசார் இப்போது பதிவு செய்துள்ளனர்.

நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவை பிரஜ்வல் வழக்கு அதிர வைத்துக் கொண்டு இருக்கிறது.

Prajwal Revanna booked for repeatedly raping former maid in her 60s

ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

ரேவண்ணா: இந்த விவகாரத்தில் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரைப் புகார் அளிக்க விடாமல் கடத்திய புகாரில் பிரஜ்வல் தந்தை எச் டி ரேவண்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். பிரஜ்வல் தந்தை ரேவண்ணா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறப்புப் புலனாய்வுக் குழு ரேவண்ணாவை கைது செய்வதற்கு முன், மே 4ஆம் தேதி அவரது உதவியாளர் ராஜசேகருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து அந்தப் பெண் மீட்கப்பட்டார்.

மற்றொரு வழக்குப்பதிவு: இதற்கிடையே அந்த பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிரஜ்வல் மீது புதிய பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 60 வயதான அந்த பெண் பிரஜ்வல் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். அவரை தான் பிரஜ்வல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த பெண் பிரஜ்வலிடம் தன்னை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். இருப்பினும், அதையும் தாண்டி பிரஜ்வல் அந்த பெண்ணைப் பலாத்காரம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வீட்டில் வேலை செய்து வந்த அந்த பெண்ணை பல முறை பிரஜ்வல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். இந்தச் சூழலில் தான் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரஜ்வல் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஏற்கனவே பிர்ஜவல் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3ஆவது வழக்காக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளை விட்டே வெளியே வர முடியாத சூழல்: பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்திருந்த நிலையில், அவை வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஹாசன் தொகுதியில் இந்த வீடியோ ஏற்கனவே பரவி விட்ட நிலையில், அங்கு உள்ள பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார்கள். மேலும், பல பெண்கள் வேறு ஊர்களுக்கும் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ப்ளூ கார்னர் நோட்டீஸ்: இந்த வழக்கைச் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம் பிரஜ்வல் ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரை பிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+