Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இன்னும் 2,3 மணி நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும்.." கூட்டணி யாருடன்.. புதிர் போடும் குமாரசாமி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த புதன்கிழமை தான் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு இருந்த 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் சிறு சிறு வன்முறை ஏற்பட்டாலும் கூட பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.

Two national parties doesnt approach for alliance says JDS leader Kumaraswamy

அங்கே தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. மொத்தம் 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை என்ற சூழலே இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பலவற்றில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், அங்கே பாஜக மிகத் தீவிரமான ஒரு இறுதிக் கட்ட பிரசாரத்தை முன்னெடுத்தது.

அதைத் தொடர்ந்து வந்த எக்ஸிட் போல்களில் கடும் போட்டி இருக்கும் என்ற கூறப்பட்டிருந்தது. சில சர்வேக்கள் காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பிடிக்கும் என்றும் சில சர்வேக்கள் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டிருந்தது.

தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கிங் மேக்கராக உருவாக வாய்ப்புகள் மிக மிக அதிகம். கடந்த 2018 தேர்தலிலும் தொங்கு சட்டசபை அமைந்த போது ஜேடிஎஸ் கிங் மேக்கராக ஆனது. அப்போது குமாரசாமி தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என கேட்டிருந்தார். இந்தச் சூழலில் நேற்றைய தினம் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுமே தங்களிடம் ஆதரவே கேட்டதாகக் கூறி ஜேடிஎஸ் தரப்பு பகீர் கிளப்பியது.

Two national parties doesnt approach for alliance says JDS leader Kumaraswamy

காரணம் தேர்தலுக்கு முன்பு வரை இரு கட்சிகளுமே ஜேடிஎஸ் உடன் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜேடிஎஸ் தலைவர் குமராசமி இது குறித்து சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி குறித்து எந்தவொரு கட்சியும் தங்களை அணுகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "இன்னும் 2-3 மணி நேரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக் கணிப்புகள் 30 முதல் 32 இடங்களை ஜேடிஎஸ் கட்சிக்கு வழங்கியுள்ளன. எங்கள் கட்சி ஒரு சிறிய கட்சி, எனக்கு எந்த தேவையும் இல்லை. கர்நாடக மக்களின் வளர்ச்சியை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+