Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dharmasthala exhumation: தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. தானாக முன்வந்து சாட்சி சொன்ன இரண்டு பேர்.. அடுத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் தர்மஸ்தலா விவகாரம் பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இந்த வழக்கை இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வருகிறார்கள், முன்னாள் தூய்மைப் பணியாளர் சொன்ன இடங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக இருவர் சாட்சி அளித்துள்ளனர். தர்மஸ்தலாவில் ஒரு சடலம் புதைக்கப்படுவதைக் கண்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் தர்மஸ்தலா விவகாரம் இப்போது நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. இதில் அந்த முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. அதில் சில இடங்களில் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Two New Witnesses Claim Illegal Burials in Dharmasthala Case SIT Intensifies Probe

தொடரும் விசாரணை

கடந்த வாரம் வரை அந்த நபர் சொன்ன இடங்களில் தான் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை பகபலி மலையில் நடத்தப்பட்ட புதிய ஆய்விலும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 அடி ஆழத்தில் 20 * 20 அடி பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும், அங்கு எந்தவொரு சடலமோ அல்லது மனித எச்சங்களோ கண்டுபிடிக்கப்படவில்லையாம்.

அதேபோல முன்பு குறிக்கப்பட்ட பாயிண்ட் 16-ல் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் நடத்தப்பட்ட விரிவான தேடுதல் நடவடிக்கையிலும் எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. இதுவரை இந்த விசாரணையில் 16 வெவ்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 6 மற்றும் 10வது இடங்களில் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 13ஆவது இடத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திடீர் திருப்பம்

இந்தச் சூழலில் தான் திடீர் திருப்பமாக இருவர் தானாக முன்வந்து வேறு ஒரு இடத்தில் உடல்களைப் புதைக்கப்படுவதை தாங்கள் பார்த்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் சொன்ன இடத்தில் அடுத்தகட்டச் சோதனையை ஆரம்பிக்கச் சிறப்பு விசாரணைக்குழு திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. தர்மஸ்தலா விவகாரத்தில் நாளுக்கு நாள் நடக்கும் விஷயங்கள் பரபரப்பைக் கிளப்புவதாகவே இருக்கிறது.

பாஜக சாடஸ்

அதேநேரம் தர்மஸ்தலாவுக்கு எதிராகத் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் நடப்பதாக கர்நாடக பாஜக சாடியுள்ளது. இது தொடர்பாக சிக்பல்லாபுரா பாஜக எம்எல்ஏ எஸ்.ஆர். விஸ்வநாத் பேசுகையில், "தர்மஸ்தலா ஒரு புனிதமான மற்றும் மரியாதைக்குரிய இடம். அந்த புனிதத் தலம் குறித்து தவறான பிரச்சாரம் பரப்பப்படுகிறது. எனவே, ஆகஸ்ட் 16 அன்று, யெலஹங்காவில் இருந்து தர்மஸ்தலாவுக்கு ஒரு பிரமாண்டமான 'தர்மஸ்தலா சலோ' பேரணியை நடத்தவுள்ளோம். நாங்கள் தர்மஸ்தலாவுடன் இருக்கிறோம்' என்ற முழக்கத்துடன் 200க்கும் மேற்பட்ட கார்கள் காவி கொடிகளுடன் இந்தப் பேரணியில் பங்கேற்கும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு ஆளானவர்களின் சடலங்களைப் புதைத்ததாக ஒரு நபர் சொன்னால்.. முதலில் அவரையே தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற குற்றங்களை அறிந்தும் சடலங்களைப் புதைத்திருந்தால், அவரும் குற்றவாளி தான். மற்றவர்களுக்கு முன்பாக அவரை தண்டிக்க வேண்டும்" என்றார்.

பொய் தகவல்

முன்னாள் துணை முதல்வர் கே.எஸ். ஈஸ்வரப்பாவும் இதேபோன்ற கருத்துகளையே கூறியிருக்கிறார். சிலர் பொய்களைப் பரப்பி கவனத்தை ஈர்க்க முயல்வதாகவும் அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்றும் ஈஸ்வரப்பா தெரிவித்தார். மேலும், இந்து சமூகத்தை இழிவுபடுத்தவும், தர்மஸ்தலா போன்ற புனிதமான இடம் குறித்து சந்தேகம் ஏற்படுத்தவே இதுபோல பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+