ஆபாச வீடியோ! மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா? உடுப்பி கல்லூரியில் குஷ்பு ஆய்வு! பரபர தகவல்
பெங்களூர்: உடுப்பியில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் கழிவறையில் ரகசியமாக கேமரா வைத்து சகமாணவிகளை ஆபாசமாக 3 மாணவிகள் வீடியோ எடுத்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு ஆய்வு மேற்கொண்டு முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே அம்பலபாடி என்ற இடம் உள்ளது. இங்குள்ள தனியார் பாரா மெடிக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கர்நாடகா மட்டுமின்றி கேரளாவில் இருந்து மாணவிகளும் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த கல்லூரி பரபரப்பான குற்றச்சாட்டுக்கு உள்ளானது. அதாவது கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுக்கப்பட்டதாக வெளியான தகவல் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதாவது கல்லூரியில் படிக்கும் 3 மாணவிகள் கழிவறையில் யாருக்கும் தெரியாமல் ரகசிய கேமரா பொருத்தியதாகவும், அதன்மூலம் மாணவி ஒருவரை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோ கல்லூரி ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இதுகுறித்த புகாரில் கல்லூரி நிர்வாகம் 3 மாணவிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. மேலும் புகாரின் அடிப்படையில் மல்பே போலீசாரும் 3 மாணவிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தான் உடுப்பி கல்லூரி சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜகவினர் பல இடங்களில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் இருப்பதாக கூறி பாஜகவினர் போராட்டத்தை தொடங்கினர்.
இதனால் உடுப்பி கல்லூரி விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் சம்பவம் குறித்து விசாரிக்க நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ள குஷ்பு உடுப்பிக்கு சென்றார். அங்கு அவர்கள் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து முக்கிய விபரங்களை பெற்றார்.
அதன்பிறகு நேற்று பாரா மெடிக்கல் கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கழிவறையில் கேமரா வைக்க முடியுமா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்தார். மேலும் கல்லூரி நிர்வாகத்திடம் அவர் விசாரித்தார். பின்னர் குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நான் யாரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வரவில்லை. தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்ததால் விசாரணை மேற்கொண்டேன். இந்த வழக்கில் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போலி வீடியோ, தகவல்களுக்கு இடமளிக்க கூடாது. போலீஸ் விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் கேமரா வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
கேமரா பொருத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வதந்தி பரவி வருகிறது, தவறான வீடியோக்கள் சுற்றி வருகின்றன. வீடியோ தொடர்பாக தடயவியல் துறை ஆய்வின் அறிக்கைக்காக தேசிய மகளிர் ஆணையம் காத்துள்ளது. இதனால் தற்போது வரை வழக்கில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அறிக்கை, விசாரணை முடிந்த பிறகு தான் இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் இறுதி முடிவுக்கு வரும். அதுவரை வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்'' என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications