2 மாதம்தான்.. கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியா? ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா மோடில் பாஜக?
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் நாளை மறுநாள் எம்.எல்.ஏக்கள் அவசர கூட்டத்தை அக்கட்சி மேலிடம் கூட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு மரண அடியை கொடுத்த காங்கிரஸ், அமைச்சரவை உருவாக்கத்திலும் தீவிர கவனம் செலுத்தியது. டெல்லியில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்ட நிலையில்தான் அமைச்சரவையே உருவானது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 மாதங்கள்தான் ஆகிறது... இந்நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆட்சியில் அமர்ந்த உடனேயே புதிய நியமனங்கள், இடமாறுதல்கள் உள்ளிட்டவைகளில் எம்.எல்.ஏக்கள் அதிதீவிரமாக கவனம் செலுத்துகின்றனர்; ஆனால் இந்த ஆர்வத்துக்கு உடனே ஆட்சியில் இருந்து பதில் கிடைப்பது இல்லை.. இதுதான் அதிருப்திக்கு காரணம் என்கின்றனர் சில சீனியர் எம்.எல்.ஏக்கள். இப்படியான அதிருப்தியை தொடக்க நிலையிலேயே சரி செய்ய்யாமல் விட்டுவிட்டால் பாஜக அறுவடை செய்வதை தடுக்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர் சில சீனியர் எம்.எல்.ஏக்கள்.
கர்நாடகாவை பொறுத்தவரை பாஜக, இலவு காத்த கிளியாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை களவெடுக்க காத்திருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த கதைதான். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆபரேஷன் சிங்கப்பூர் குறித்து துணை முதல்வர் சிவகுமார் பகிரங்கப்படுத்தி இருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க சிங்கப்பூரில் மஜத தலைவர் குமாரசாமி மற்றும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர் எனவும் சிவகுமார் தெரிவித்திருந்தார்.
தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனையடுத்து திடீரென நாளை மறுநாளே கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏக்களின் அதிருப்தி குரல்களுக்கு ஆறுதல் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனராம்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications