வெடித்து சிதறிய பெங்களூர் விதான சவுதா.. ரீல்ஸ்க்காக ஏஐ வீடியோ போட்ட பீகார் தொழிலாளி கைது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள விதானசவுதா (கர்நாடகா சட்டசபை கட்டடம்) வெடித்து சிதறுவது போல் ஏஐ மூலம் வீடியோ உருவாக்கி ரீல்ஸ் வெளியிட்ட பீகார் தொழிலாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

vidhana-soudha-blast-video-bihar-migrant-worker-arrested-by-police-in-bengaluru

பெங்களூர் மையப்பகுதியில் விதான சவுதா அமைந்துள்ளது. கர்நாடகா சட்டசபை கட்டடம் இதுதான். இதனை சுற்றிய உயர்நீதிமன்றம், சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம், பிரஸ் கிளப், பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதனால் விதான சவுதாவை சுற்றிய இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் முதல் இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவ தொடங்கியது.

அந்த வீடியோவில் விதான சவுதா வெடித்து சிதறுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. விதான சவுதாவின் முன்பு டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து ஒருவர் நிற்கிறார்.தலையில் தொப்பி மற்றும் முதுகில் பேக் அணிந்துள்ளார். அவர் விதான சவுதாவை நோக்கி விரல்களை துப்பாக்கி போல் வைத்து திரும்புவதும், உடனே விதான சவுதா வெடித்து சிதறுவது போல் அந்த வீடியோ இருந்தது.

இந்த வீடியோ ஏஐ உதவியுடன் எடிட் செய்யப்பட்டு வெளியிட்டு இருந்தால் இந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுதது பெங்களூர் விதான சவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வீடியோ Jnx_King_h_g என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டது தெரியவந்தது. ஏஐ உதவியுடன் இந்த வீடியோவை உருவாக்கி வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து வீடியோ வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது பெயர் ஹஸ்ரத் அலி சோயப் என்பதாகும்.அவர் பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக தங்கி 'பைப்' கனெக்‌ஷன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி கர்நாடகாவின் மிகவும் முக்கியமான கட்டடமான விதான சவுதாவை வெடிப்பது போல் வீடியோ வெளியிட்டால் அதிக பார்வையாளர்கள் மற்றும் பாலோயர்ஸ் கிடைப்பார்கள் என்று ஹஸ்ரத் அலி கூறியுள்ளார். இருப்பினும் அவருக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+