Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறார் ஆபாச படம் பார்ப்பது குற்றமா? ஹைகோர்ட் தந்த பரபர தீர்ப்பு பாருங்க.. மறுபடியும் முதல்ல இருந்தா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சிறார் ஆபாச படம் குறித்து, முக்கியமான தீர்ப்பு ஒன்றினை கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பான விவாதம் ஒன்றும் புதிதாக முளைத்திருக்கிறது. என்ன காரணம்?

கடந்த 2020ம் ஆண்டு, தமிழகத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபி-யாக பொறுப்பில் இருந்தவர் ரவி.. தன்னுடைய பதவியிலிருந்தபோது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை களைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்..

Pornography Karnataka High Court Child Porn

குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை குறைப்பதற்காகவும், தடுப்பதற்காகவும் அதிரடியிலும் இறங்கினார் ஏடிஜிபி ரவி.

வீடியோக்கள்: அந்தவகையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோவை பார்க்கக்கூடாது என்றும், செல்போனிலேயே அதுபோன்ற ஆபாச வீடியோக்களை வைத்திருக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், ஆபாச படம் பார்ப்பவர்களை அடுத்தடுத்து கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கினார்.

அப்போது ஏடிஜிபி ரவி சொன்னபோது, "பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் முகம் தெரியாத நபா்களால்தான் சோஷியல் மீடியா மூலம் நடக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை டவுன்லோடு செய்த மற்றும் அதனை ஷேர் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆபாச வீடியோவை டவுன்லோடு செய்தவர்களும் கைதாகி வருகிறார்கள்.

வரவேற்பு: இந்த கைது நடவடிக்கையால் இன்டர்நெட்களில் ஆபாச படம் பார்ப்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்வென்றால், யாரெல்லாம் ஆபாச படத்தை டவுன்லோடு செய்தார்களோ, அவர்களே அதை நீக்கியும் உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில் காவலன் செயலி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களும், குழந்தைகளும் இந்த ஆப்பை டவுன்லோடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறியிருந்தார் ஏடிஜிபி ரவி.

ரவியின் இந்த செயல்பாடுகள் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி காவல்துறை எடுத்த இந்த அதிரடிகள் தமிழக மக்களிடம் வரவேற்பையும் பெற்றதை இங்கு நாம் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

ஆபாச படம்: இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகா நீதிமன்றம் ஒரு பரபரப்பு உத்தரவை வழங்கியிருக்கிறது.. கர்நாடகாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறார் ஆபாசப் படம் பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டார். எனவே, அவர் மீது இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67B-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கான வழக்கு விசாரணையும் கர்நாடக கோர்ட்டில் நடைபெற்றது.

அப்போது, சிறார் ஆபாசப் படம் பார்ப்பது குற்றம் கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது..

அப்பீல் மனு: இதனிடையே, அரசு சார்பில் கர்நாடக ஹைகோர்ட்டில் மீண்டும் இது சம்பந்தமாக அப்பீல் செய்யப்பட்டது... இந்த மேல்முறையீடு வழக்கானது, தனிநபர் அமர்வான, நீதிபதி நாகபிரசன்னாவிடம் கடந்த வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இதற்கு முந்தைய தீர்ப்பாணை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 67-B யின் a பிரிவை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகளை அனுமதிக்காமல், 67B (b) பிரிவையும் கவனிக்காமல், குற்றவாளி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதால், அவருக்கு இது சாதகமானதாக அமைந்துள்ளது.

விளம்பரம்: 67B (b) பிரிவின்படி குழந்தைகளை ஆபாசமான அல்லது அநாகரிகமான அல்லது பாலியல் ரீதியான முறையில் சித்திரிக்கும் எந்தவொரு வீடியோ மற்றும் படங்களையும் , இணையத்தில் தேடுதல், பதிவிறக்கம் செய்தல், விளம்பரம் செய்தல், விளம்பரப்படுத்துதல், பரிமாற்றம் செய்தல் அல்லது விநியோகம் செய்வது குற்றமாகும். குற்றம்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், இந்த நீதிமன்றத்தின் உத்தரவைத் திரும்பப் பெறவோ அல்லது உத்தரவை மறுபரிசீலனை செய்யவோ முடியாது என்ற மனுதாரரின் வாதத்தை நிராகரிக்கிறோம்.

தவறு கிடையாது: ஆனால், பிற விதிகளால் உள்ளார்ந்த அதிகாரங்களை கட்டுப்படுத்த முடியாது. நீதிபதிகளும் மனிதர்கள்தான். அவர்கள் சொல்வதில் தவறு இருக்காது என்று கூற முடியாது... அந்த தவறை திருத்த வாய்ப்பும் உள்ளது. அதனால், முந்தைய நீதிமன்ற உத்தரவில் முட்டாள்தனம் இருப்பதாக தெரிந்த பிறகு, அந்த தவறை நிலைநாட்டுவது வீரமான செயல் கிடையாது" என்று தெரிவித்தார்.

சிறார் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது என்று பிறப்பித்திருக்கும் இந்த கர்நாடக நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பானது, மறுபடியும் சோஷியல் மீடியாவில், விவாத பொருளாக எழுந்துள்ளது.

ஆபாச படங்கள்: இதுபோன்ற ஒரு வழக்கு நம்ம சென்னையிலும் சமீபத்தில் நடைபெற்றது.. அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய செல்போனில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்த்ததாக அம்பத்தூர் போலீசில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்ததால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த இளைஞர், சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. ஆனால், அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் என்று சொல்லி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
குற்றமல்ல: ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை என்று ஹைகோர்ட் நீதிபதிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். ஒரு தனி நீதிபதி எப்படி இப்படியொரு கருத்தை சொல்ல முடியும்? இது கொடுமையானது" என்று ஆனந்த் வெங்கடேசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+