சொத்து குவிப்பு.. வைரம், முத்து 44 ஏசிகள்.. ஏலத்தில் ஜெயலலிதா சொத்து.. பட்டியல் ரெடி
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை 18 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என கடந்த 2017-ஆம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் வரும் நிதியை சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவிட்ட தொகையை அரசு ஈடு செய்ய வேண்டும் என பெங்களூர் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு சரியானது. உடனடியாக கர்நாடகா அரசும் நீதித் துறையும் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களையும் ஏலம்விட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம்விட வழக்கறிஞர் கிரண் ஜவாலியா என்பவரை கர்நாடகா அரசு நியமித்தது. இந்த நிலையில்தான் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம்விடுவது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது தங்கம், வைரம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பதித்த நகைகள் என சுமார் 30 கிலோ எடைக்கு கர்நாடகா அரசின் கருவூலத்தில் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை தொடங்கிய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் உள்ள ஜெயலலிதாவின் மற்ற பொருட்களை சட்டப்படி விரைந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருந்து வைரம், முத்து உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள், 11,344 பட்டுப்புடவைகள், 44 ஏசிகள், 91 வாட்ச்கள், 27 வால் கிளாக்குகள், 146 பர்னிச்சர்கள் , 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள் என 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஏலம்விட வேண்டிய ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை பெங்களூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒப்படைத்தனர். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசியின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள பணத்தின் தற்போதைய மதிப்பு குறித்து அறிக்கை அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆயிரக்கணக்கான சேலைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட சொத்து பட்டியலில் இல்லை. சட்டவிரோத சொத்து பட்டியலில் சேலைகள், காலணிகள் இல்லாததால் அவற்றை ஏலம்விட உத்தரவிட முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்திக்கு பெங்களூர் நீதிமன்றம் பதில் அளித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications