ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம்
பெங்களூர்: தமிழக முதல்வர் விஜய் டெல்லிக்கான 3 நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த சமயத்தில் முதல்வர் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றி சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். ஜனாதிபதி திரெளபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அதன்பிறகு நேற்று 2வது நாளில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்றார்.

3வது நாளான இன்று விஜய் தனது டெல்லி பயணத்தை முடித்து கொண்டு புறப்பட்டார். டெல்லியில் இருந்து முதல்வர் விஜய் கர்நாடகா மாநிலம் மங்களூருவுக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து காரில் உடுப்பில் மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இந்த சமயத்தில் விஜய் தனது ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் அதிருப்தியாகி உள்ளனர். அதாவது விஜய் முதல்வரான பிறகு கர்நாடகாவிற்கு முதல் முறையாக சென்றார். மங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் அதிகமானவர்கள் குவிந்தனர். ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்துவிட்டு காரில் புறப்பட்டார்.
விஜய் விமான நிலையத்தில் இருந்து அங்குள்ள தனியார் ஹோட்டலுக்கு செல்வார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு காரில் செல்வார் என்று கூறப்பட்டது. இதனால் விஜய் ஓய்வெடுப்பதாக கூறிய ஹோட்டல் அருகே இன்று காலை முதல் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் விஜய், விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்லவில்லை. நேரடியாக உடுப்பி மாவட்டம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார். இதனால் ஹோட்டல் அருகே விஜய்யை பார்க்க குவிந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
திமுக எதிர்த்த VB-GRAM திட்டத்தை.. அமல்படுத்தும் விஜய் அரசு! தமிழகத்துக்கு ₹5,000 கோடி கூடுதல் சுமை -
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம்












Click it and Unblock the Notifications