கர்நாடகா புதிய முதல்வர் சித்து? சிவா? காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 'இமாச்சல்' பாணி வாக்கெடுப்பு!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா சட்டசபையின் 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10-ல் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் 135; பாஜக- 66; மஜத 19 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். பெரும்பான்மைக்கும் மிக அதிகமான இடங்களைப் பெற்று தனிப்பலத்துடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகாவில் அமைய இருக்கும் புதிய ஆட்சியில் முதல்வர் யார் என்ற சிக்கல் எழுந்துள்ளது. பொதுவாக கர்நாடகா காங்கிரஸில் தற்போதைய நிலையில் சித்தராமையா அல்லது டிகே சிவகுமார்தான் முதல்வர் என்கிற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் வட்டாரங்களில் சித்தராமையாவுக்குதான் ஆதரவு அதிகம்; டிகே சிவகுமாருக்கு முக்கிய இலாகாதான் கிடைக்கும். ஒக்கலிகா, லிங்காயத், முஸ்லிம் என 3 தரப்பினருக்கு தலா 1 துணை முதல்வர் பதவி ஒதுக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பெங்களூருவில் இன்று மாலை நடைபெறும் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய போது யார் முதல்வர் என்கிற சிக்கல் வந்தது. அப்போது அத்தனை தரப்பும், வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என தீர்மானித்தனர். அதனால் சுமூகமாக முதல்வர் யார் என்ற பிரச்சனை முடிவுக்கு வந்தது.
தற்போது அதே பாணியில் கர்நாடகா முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாம். இன்றைய கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய இருக்கின்றனராம். அதனால் டிகே சிவகுமாரும் முதல்வர் ரேஸில் இருப்பார் என்கின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications