"ஹிந்துவா?".. நான் முஸ்லிம்தான்.. அதுக்குன்னு இப்படியா.. கலங்கும் இளம்பெண் ஹைஃபா.. திரண்ட இணையதளம்
முஸ்லிம் பெண்ணுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கப்பட்டுள்ள சம்பவம் விவாதத்தை கூட்டியுள்ளது
பெங்களூரு: ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவர், ட்விட்டரில் ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.. என்ன நடந்தது?
Recommended Video
பொதுவாக வடமாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், வெறுப்பை உமிழ்வதும் அதிகமாக நடப்பாக குற்றச்சாட்டு உள்ளது..
அதிலும் தேர்தல் சமயங்களில் இது அளவுக்கு அதிகமாகவே எல்லை மீறிவிடுவதாக உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதும், அவர்களின் உணர்வுகளை தூண்டிவிடுவதும் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.

ராட்சசர்கள்
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு ஒரு சாமியார் பேட்டி தந்தார்.. அவர் காஸியாபாத் மாவட்டம் டாஸ்னாவில் உள்ள தேவி கோவிலின் பீடாதிபதி ஆவார்.. அந்த துறவி பெயர் யதி நரசிங்கானந்த்.. "இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் உலகிலிருந்தே ஒழிக்க வேண்டும், இஸ்லாமியர்கள் என்றழைக்கப்படுபவர்கள் முற்காலத்தில் ராட்சசர்கள் ஆவார்கள்" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. இந்த சாமியார் மீது இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தனிக்கதை.. ஆனால், இதற்கு பிறகு லவ் ஜிகாத் விவகாரங்களும், ஹிஜாப் விவகாரமும் வெடித்து கிளம்பின.

ஹைஃபா
இப்படி ஏதாவது ஒருவகையில் இஸ்லாமிய பெருமக்கள் நசுக்கப்படுவதாகவும், அவர்களின் உரிமைகளும் மறுக்கப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் எந்நேரமும் கருத்துக்கள் வலம்வருவது அதிகரிக்க துவங்கி உள்ளது.. இந்நிலையில், பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. அவர் ஒரு முஸ்லிம் பெண்.. பெயர் ஹைஃபா. இவர், பெங்களூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடியிருக்கிறார்... எத்தனையோ புரோக்கர்களை தொடர்பு கொண்டு, வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார்.. அதில் ஒரு புரோக்கர் நம்பரின் வாட்ஸ்அப் நம்பரை பெற்று வாடகைக்கு வீடு ஒன்று இருக்கிறதா என்று கேட்டுள்ளார்..

புரோக்கர் + ஹைஃபா
அந்த புரோக்கர், "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு இந்த பெண், "ஹைஃபா" என்று தன் பெயரை சொல்லி உள்ளார்.. உடனே அந்த நபர், "நீங்கள் இந்துவா?" என டக்கென கேட்டுள்ளார்.. அதை மறுத்துள்ளார் ஹைஃபா,.. "இல்லை, நான் இந்து இல்லை.. அதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனையா?" என்று திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு அந்த புரோக்கர், "வீடு என்னமோ காலியாகத்தான் இருக்கு.. ஆனால் அதன் ஓனர், இந்து குடும்பத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்" என்று சொன்னாராம் ..

இந்துவா..?
ஒரு முஸ்லிம் என்பதாலேயே, தனக்கு வாடகைக்கு வீடு மறுக்கப்பட்டது என்று ஹைஃபா தன்னுடைய ட்விட்டரில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.. இந்த பதிவை எப்போது போட்டார் தெரியுமா? இந்த நாட்டின் சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடி முடிக்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி எப்படி இருந்தது தெரியுமா? என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி உள்ளார் ஹைஃபா.. ஹைஃபா பதிவிட்ட இந்த ட்வீட், இன்று விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.. இதற்கு பலரும் திரண்டு வந்து ஹைஃபாவுக்கு ஆறுதல் சொல்லி, தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

ஹைஃபா
அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கும் இப்படிப்பட்ட அனுபவங்கள் நேர்ந்ததாக ஹைஃபாவிடம் சொல்லி வருகிறார்கள்.. அதில் ஒருவர், " இப்படித்தான் நானும் மும்பையில், சீக்கியர்களுடன் பிரச்சனையை சந்தித்தேன்.. அசைவம் சாப்பிடுவதில்தான் பிரச்சனை வந்தது என்று புலம்பி உள்ளார்.. எல்லாரும் தேசிய கொடியை வீடுகளில் ஏற்றி வைத்து என்ன பலன்.. இந்த கொடி நம் அனைவரையும் இந்தியர்களாக கம்பீரம் கொள்ள செய்கிறது என்பதைதானே உணர வேண்டும்.. நீங்கள் இப்படிப்பட்ட செயலுக்கு ஆளாக நேரிட்டதற்கு வருந்துகிறோம்.. உண்மையிலேயே பரிதாபமான நிலைதான் உங்களுக்கு.. இந்த கடினமான சம்பவத்தை நீங்கள் கடந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

ஒரே ரூம்
மற்றொருவர், "பல வருடங்களுக்கு முன்பு நான் பெங்களூரில் இருந்தபோது, இதே போன்ற அனுபவம் எனக்கும் கிடைத்தது.. நாங்கள் மொத்தம் 4 பேர், 2 இந்துக்கள் மற்றும் 2 முஸ்லிம்கள்.. எல்லோருமே ஒரே ரூமை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம்.. ஆனால் அந்த வீட்டு ஓனர், என்னுடைய இந்து நண்பர்களிடம், "நீங்க வேணும்னா இங்கே தங்குங்கள், முஸ்லிம்களை என் வீட்டில் வைத்திருக்க முடியாது" என்றார்.. ஆனால், என்னுடைய இந்து நண்பர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? எங்களுடன் சேர்ந்து அவர்களும் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ஹவுஸ் ஓனர்
மேலும் சிலர், "அது அவர்களுக்கு சொந்தமான வீடு.. அங்கு வாழ விரும்பினால் பின்பற்ற வேண்டிய சில நம்பிக்கைகள் அவர்களிடம் உள்ளன. இந்துக்கள், முஸ்லிம்கள் என யாராக இருந்தாலும், வெவ்வேறு விதிகள் மற்றும் நெறிமுறைகளுடன் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. வீட்டு ஓனர்கள் அவர்களது, சம்பிரதாயங்களை, விருப்பங்களை சொல்கிறார்கள், இதில் ஒன்றும் தவறில்லையே.. நமக்கு பிடிக்காவிட்டால், விலகிவிட வேண்டியதுதானே" என்று ஹவுஸ் ஓனருக்கு சப்போர்ட் செய்து பதிவிட்டு வருகின்றனர்... ஆனால், பெரும்பாலானோர், "இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.. அதற்கான புதிய தொடக்கத்தை உடனடியாக தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications