Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங். ஜெயிச்சுட்டுல்ல.. கணக்கெடுக்க வராதீங்க..மின் ஊழியர்களை விரட்டும் மக்கள்! புது அரசுக்கு தலைவலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுநாள் ஆட்சி அமைக்கிறது. அங்கு புதிய அரசு அமையும் முன்பே தேர்தல் வாக்குறுதிகளை வைத்து கிராமப்புற பகுதிகளில் மக்கள் மின் கட்டணத்தை செலுத்த மறுத்து அடம் பிடிக்க தொடங்கியிருக்கிறார்களாம்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

We are promised 200 units of free power so wont pay the current bill- Says Villagers in Karnataka

தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் சித்தராமையும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் முதல்வர் பதவி தங்களுக்குதான் வேண்டும் என்று விடாப்படியாய் இருந்தனர்.

இதனால் கடந்த 5 தினங்களாக தீவிர ஆலோசனை நடத்திய காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லி அழைத்து தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டது. மாரத்தான் ஆலோசனைக்கு பிறகு இந்த விவகாரத்தில் நேற்று இரவு சுமூக உடன்பாடு ஏற்பட்டது. சித்தராமையவிற்கு முதல்வர் பொறுப்பும் டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

We are promised 200 units of free power so wont pay the current bill- Says Villagers in Karnataka

அதுபோக சில முக்கிய துறைகளும் டிகே சிவக்குமாருக்கு வழங்கப்பட இருக்கிறது. இருவருமே இதை ஏற்றுக்கொண்டதையடுத்து இன்று காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. கட்சியில் நலன் கருதி டிகே சிவக்குமார் இந்த முடிவை எடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறினர். முதல்வர் விவகாரத்தில் ஒரு வழியாக முடிவு எட்டப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேகம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்படுகிறார். அதன்பிறகு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். வரும் 20 ஆம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சித்தராமையா முதல்வராக பதவியேற்க உள்ளார்.

We are promised 200 units of free power so wont pay the current bill- Says Villagers in Karnataka

இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தயராகி வரும் நிலையில், தற்போதே அங்குள்ள மக்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாது என்று அதிகாரிகளிடம் சண்டைக்கு நிற்பதாக சொல்லப்படுகிறது.

கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையும் ஒன்றாகும். தேர்தல் அறிக்கையில் பல இலவச வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டு இருந்தது. அதில் முக்கியாம ஆட்சி வந்தால் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசாக கொடுப்போம் என்று கூறப்பட்டு இருந்தது.

We are promised 200 units of free power so wont pay the current bill- Says Villagers in Karnataka

ஆட்சி அமைந்தததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனக் கூறி காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது. தற்போது ஆட்சி அமைந்து இருப்பதால் கொப்பல்,கலபர்க்கி, சித்ரதுர்க்கா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில கிராம மக்கள் மின்சார கட்டணத்தை செலுத்த மறுக்கிறார்களாம்.

சித்ரதுர்க்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மீட்டரில் எத்தனை யூனிட் ஓடியிருக்கிறது என்று கணக்கெடுத்து விட்டு அதற்கான பில்லை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், இதை வாங்க மறுத்த மக்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம் கொடுக்கிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. எனவே அதை நிறைவேற்ற வேண்டியது காங்கிரசின் கடமை.

நாங்கள் கட்ட மாட்டோம் என்று மறுத்துள்ளனர். சித்தராமையா, டிகே சிவக்குமார் எங்கள் மின் கட்டணத்தை செலுத்தட்டும். எனவே மின் கட்டணம் கேட்டு இங்கே வராதீர்கள். நாங்கள் வாக்களித்த உடனேயே எங்களுக்கு இலவச மின்சாரத்தை பெறும் உரிமை வந்து விட்டது எனக் கூறியிருக்கிறார்கள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மின்வாரிய ஊழியரும் யோசித்துக் கொண்டே சென்றுள்ளார்.

ஆட்சி அமைப்பதற்கு முன்பே கர்நாடகாவில் ஊரகப்பகுதி மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சொன்னபடி தனது வாக்குறுதியை நிறைவேற்றுமா இல்லை காலம் தாழ்த்துமா? என்பது வரக்கூடிய நாட்களில் தான் தெரிய வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+