Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரு வேண்டவே வேண்டாம்.. பல்லாங்குழி சாலையால் நகரை விட்டு வெளியேறுவதாக அறிவித்த முக்கிய நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சாலை பள்ளத்தால் ஊழியர்கள் கஷ்டப்படுகின்றனர் என்று கூறி முக்கிய நிறுவனம் நகரை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளது. பிளாக்பக் நிறுவனத்தின் சிஇஓவான ராஜேஷ் யாபாஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கர்நாடகா மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமாக பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

we-have-decided-to-move-out-from-bengaluru-due-to-pothole-says-blackbuck-ceo

பெங்களூர் பெல்லந்தூர் அவுட்டர் ரிங் ரோட்டில் பிளாக்பக் (Blockbuck)எனும் லாஜிஸ்டிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், சிஇஓவாகவும் செயல்பட்டு வருபவர் ராஜேஷ் யாபாஜி.

வெளியேறும் நிறுவனம்

இந்நிலையில் தான் ராஜேஷ் யாபாஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஓஆர்ஆர்-யில் (பெல்லந்தூர்) எங்களின் அலுவலகம் + வீடு கடந்த 9 ஆண்டுகளாக உள்ளது. இங்கு இப்போது தொடர்ந்து இருப்பது மிகமிக சிரமானதாக இருக்கிறது. இதனால் இங்கிருந்து வேறு இடத்துக்கு நகர இருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன. எனது ஊழியர்களின் சராசரி பயண நேரம் 1.5 (அலுவலகம் வருவதற்கு மட்டும்)மணிநேரத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பள்ளம் மற்றும் தூசி நிறைந்த சாலைகள் உள்ளன.

அடுத்த 5 ஆண்களில்எந்த மாற்றத்தையும் பார்க்கப்போவது இல்லை'' என்றார். அதாவது பெங்களூரில் நகரில் உள்ள சாலை பள்ளங்கள் உள்ளது. இதனால் அலுவலகத்தை நகரில் இருந்து மாற்ற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அரசுக்கு டிமாண்ட்

இவரது இந்த பதிவுக்கு ஐடி உள்பட பிற நிறுவனங்களின் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி சாலை பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் CFO-வும் ஆரின் கேப்பிடல் தலைவருமான மோகன்தாஸ் பாய் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛பெங்களூரில் ஆளும் அரசு தோல்வியடைந்துள்ளது. டிகே சிவக்குமார் (துணை முதல்வர் - பெங்களூர் நகர வளர்ச்சி அமைச்சர்) இந்த பிரச்சனையை பாருங்கள். ஏனென்றால் சூழ்நிலை நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு மோசமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.

அதேபோல் பயோகன் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த பிரச்சனை முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்க அவசர நடவடிக்கை வேண்டும்'' என டிகே சிவக்குமாரை டேக் செய்துள்ளார்.

ஐடி நிறுவனம் சங்கம் அதிருப்தி

இதுபற்றி பெங்களூர் ஐடி நிறுவனங்கள் மற்றும் தொழில் சங்கத்தின் பொது செயலாளர் கிருஷ்ணகுமார் கவுடா கூறுகையில், ‛‛பெங்களூர் அவுட்டர் ரி்ங் ரோட்டின் நிலைமை மோசமாக உள்ளது. முன்னணி நிறுவனம் நகரை விட்டு வெளியேறுவதாக அறிவித்து இருப்பதால் உடனாடியாக அரசு தலையீடு செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி வெளிப்படையான அதேவேளையில் நல்ல ரோடு, மெட்ரோ இணைப்பு, பொது போக்குவரத்தை நாங்கள் கேட்கிறோம். இது இந்தியாவின் ஐடி தலைநகர் என்ற பெயரை தக்க வைகத்து கொள்ள உதவும்'' என்றார்.

தொடரும் பிரச்சனை

பெங்களூரை நகரை எடுத்து கொண்டால் சாலை பள்ளங்கள் பெரிய பிரச்சனையாக உள்ளன. காலம் காலமாக இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்த சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஆனாலும் கூட அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் தான் பிளாக்பக் நிறுவனம் பெங்களூர் நகரை விட்டே வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+