ஐபிஎல்லை பெங்களூரில் இருந்து மாற்ற விடமாட்டோம்! RCB ரசிகர்களுக்கு குட்நியூஸ் கூறிய டிகே சிவக்குமார்
பெங்களூர்: அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் ஹோம் கிரவுண்ட்டாக சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் இருக்காது எனவும், ஆர்சிபியின் ஹோம் கிரவுண்ட்டாக புனே இருக்க வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் ஆர்சிபி அணியின் போட்டியை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற விடமாட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (ஆர்சிபி) சாம்பிபயன் பட்டத்தை வென்றது. 17 ஆண்டுகள் காத்திருந்து முதல் மறையாக ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
அதன்பிறகு மறுநாள் பெங்களூரில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் பலியாகினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆர்சிபி அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் ஆர்சிபி அணி விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடாது. ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக புனே வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
இந்நிலையில் தான் கர்நாடகா கிரிக்கெட் சங்கத்துக்கான தேர்தல் நடந்தது. இதில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஓட்டளித்தார். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக டிகே சிவக்குமார் உள்ள நிலையில் அவர் இன்று வாக்களித்தார். முன்னதாக டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‛‛பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஆர்சிபி போட்டிகள் வேறு மாநில மைதானத்துக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறதே?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு டிகே சிவக்குமார் கூறியதாவது: ஆர்சிபி கிரிக்கெட் போட்டியை பெங்களூரில் நடத்துவது கர்நாடகா மாநிலத்துக்கான மரியாதையாகும். இதனால் அடுத்த ஐபிஎல் போட்டிகளை இங்கு நடத்துவதை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நான் கிரிக்கெட்டின் ரசிகன். சமீபத்தில் நடந்த துயர நிகழ்வை இனி ஒருபோதும் நடக்க விடமாட்டேன். அதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுப்பேன். ரசிகர்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த மைதானத்துக்கு மாற்றாக பிரமாண்ட ஸ்டேடியத்தை கட்ட உள்ளோம் பெங்களூர் மைதானத்தில் எந்த வகையான போட்டிகளை நடத்த முன்வந்தாலும் அதற்கு உரிய அனுமதியை கொடுப்போம். நான் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறேன். நான் இளம்வயதாக இருந்தபோது நாகராஜ் எனக்கு ‛மெம்பர்ஷிப்' தந்தார். அவரது மகன் என்னுடைய வகுப்பு தோழன். எனக்கு பிரிஜேஷ் படேல், அணில் கும்ளே, பிரசண்ணா என அனைவரும் தெரியும். இவர்களில் யாருக்காவது ஒருவருக்கு ஓட்டளிப்பேன்'' என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications