மோடி அரசு பக்கா மூவ்.. டி.கே.சிவகுமாருக்கு போட்டாச்சு ஸ்கெட்ச்! புது சிபிஐ இயக்குநர் யார் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சி மாறிய நிலையில், டிகே சிவகுமாருக்கு ஆகாத, அம்மாநில போலீஸ் டிஜிபி பிரவீன் சூட், திடீரென சிபிஐ இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பிரவீன் சூட் மீது நடவடிக்கை பாயும் என டிகே சிவக்குமார் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிகே சிவக்குமாருக்கு எதிரான முக்கிய வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் விரைவில் அவர் மீது பிரவீன் சூட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களில் ஜெயித்த நிலையில் மற்றவர்கள் 4 பேர் வாகை சூடினர். இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.

கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவர் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று கர்நாடகா டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட் சிபிஐயின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். தற்போது இயக்குனராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக்காலம் வரும் 25ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ இயக்குனராக பிரவீன் சூட்டை பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மக்களவை எதிர்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு தேர்வு செய்தது. இதில் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரவீன் சூட்டுக்கு பதில் வேறு ஒருவரை சிபிஐ இயக்குனராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் இந்த எதிர்ப்புக்கு பின்னால் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது கர்நாடகா டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. தேர்தலுக்கு முன்பாக பாஜக அரசு 40 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. மேலும் PayCM என பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினர்.
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் கர்நாடகா போலீசார் கர்நாடகா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் டிஜிபி பிரவீன் சூட் தான் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். பிரவீன் சூட் ஒருதலை பட்சமாகவும், ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக டிகே சிவக்குமார் கடந்த மார்ச் மாதம் பிரவீன் சூட்டை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரவீன் சூட்டை "நாலயக்(பயனற்ற நபர்)" என கடுமையாக தாக்கி பேசினார். அதோடு கர்நாடகாவில் காங்கிரஸஅ கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பிரவீன் சூட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முழங்கினார். இது அப்போது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த நிலையில் பிரவீன் சூட் சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1986 ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பிரவீன் சூட் அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுவதாக இருந்தது. இதற்கிடையே தான் தற்போது சிபிஐ இயக்குனராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக சிபிஐ இயக்குனர் பதவி என்பது 2 ஆண்டுகளை கொண்டது. இதன்மூலம் 2025 வரை அவர் சிபிஐ இயக்குனராக செயல்பட உள்ளார்.
மேலும் டிகே சிவக்குமார் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பற்றி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிகே சிவக்குமாரின் வீடு, அவரது குடும்பத்தினரின் கல்வி நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்த்து வரும் பிரவீன் சூட் சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் விரைவில் டிகே சிவக்குமார் மீது நடவடிக்கை பாயுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் பிரவீன் சூட்டுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே பிரச்சனை என்பது ஒன்றும் கர்நாடகாவில் புதிது அல்ல. முன்னதாக 2013 முதல் 2018 வரை கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி நடந்தது. அப்போது சித்தராமையா முதல்வராக இருந்தார். இந்த சமயத்தில் 2017 ல் பிரவீன் சூட் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். பொதுவாக பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படும் நபர் குறைந்தது 2 ஆண்டுகளாவது பணியாற்றுவது வழக்கம். ஆனால் பிரவீன் சூட் வெறும் 7 மாதங்களில் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். இந்த பணி இடமாற்றத்துக்கும் பிரவீன் சூட் மீது காங்கிரஸ் கட்சியினர் வைத்த புகார் தான் காரணம் என கூறப்பட்டது.
அதன்பிறகு 2020ல் கர்நாடகா டிஜிபியாக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டார். அன்று முதல் பாஜக ஆட்சியில் 3 ஆண்டுகள் தொடர்ந்து டிஜிபியாக செயல்பட்டு வரும் பிரவீன் சூட் தான் தற்போது சிபிஐ இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications