சந்திரனில் ஆக்ஸிஜன்! மனிதன் மட்டும் அல்ல செடிகளும் உயிர் வாழ ஏற்ற இடமா நிலவு? சல்பரின் பயன்கள் என்ன?
பெங்களூர்: நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் இருப்பதை சந்திரயான் 3 ரோவர் கண்டறிந்துள்ள நிலையில் அதன் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட பல கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணியை செய்யும். இந்த சந்திரயான் 3 கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. சில மணி நேரத்தில் லேண்டரின் சாய்வு தளத்தில் இருந்து 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் ரோவர் இறங்கியது.
நிலவில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 5 கருவிகள் லேண்டரில் அனுப்பப்பட்டன. அது போல் ரோவரில் ஆல்பா எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் ரசாயன பொருட்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யும். அது போல் தரையிறங்கும் இடத்தில் நிலவில் மண், பாறைகள் இருக்கின்றன என்பதையும் இது ஆய்வு செய்யும்.
அந்த வகையில் தரையிறங்கிய இடத்திலிருந்து ரோவர் சுற்றி வந்த வீடியோ வெளிானது. லேண்டரில் ரம்பா எனும் கருவி அனுப்பப்பட்டுள்ளது. இது நிலவில் அயனிகள், எலக்ட்ரான்கள் எவ்வளவு இருக்கின்றன ,அதன் அடர்த்தி என்ன என்பதை அளவிடும். நிலவில் தென் பகுதி குளிர்ச்சியான பகுதி. எனவே இங்கு வெப்பநிலை எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறியும் கருவியும் அனுப்பப்பட்டுள்ளது.
அது போல் நிலவில் நில அதிர்வு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யவும் ஒரு கருவி அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 நாட்களும் தற்போது சூரிய வெளிச்சம் நிலவில் படும் என்பதால் ரோவர் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்கும். அது எடுத்த செய்திகளை லேண்டர் தகவல்களாக பூமியில் இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கும். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நிலவில் அலுமினியம், சல்பர், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீஸ், சிலிகான், ஆக்ஸிஜன் இருப்பதாக ரோவர் கண்டறிந்துள்ளது. தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்றும் தேடி வருகிறது. இவை இருந்தால் அடுத்தது தண்ணீருக்கான தேடலை நோக்கி ரோவர் செல்லக் கூடும். இதுவரை எந்த நாடுகளுமே இது குறித்த ஆராய்ச்சியை கண்டறியாத நிலையில் இந்தியா கண்டுபிடித்துள்ளது. சாதனையாகும்.
இந்த நிலையில் சல்பரின் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம். இது ஒரு பூஞ்சை கொல்லி. இது கார் பேட்டரி தயாரிக்கவும் உரம் தயாரிக்கவும் பயன்படுகிறது. மேலும் எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யவும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யவும் தாதுக்களை பிரித்தெடுக்கவும் உதவுகிறது. இது சிமெண்ட், டிட்டெர்ஜென்ட், பூச்சிக் கொல்லிகளை தயாரிக்க பயன்படுகிறது.
இந்த சல்வர் தோலின் மேற்புறத்தில் உள்ள அதிகளவு எண்ணெய்யை உறிஞ்சும். முகப்பருக்களை எதிர்த்து போராடும். தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் அல்சரால் ஏற்படும் நெஞ்சு எரிச்சலை குறைக்கவும் உதவுகிறது. சல்பர் குளோரோபில் உற்பத்திக்கு தேவையானது. ஆகஸ்ஜின் இருப்பதால் மனிதன் உயிர் வாழ முடியும் என்ற நிலையில் இந்த சல்பர் இருப்பதால் செடிகளில் குளோரோபில் உற்பத்திக்கு உதவும்.












Click it and Unblock the Notifications