பெங்களூர் வீட்டில் தனியாக இருந்த பாஜக நிர்வாகி மஞ்சுளா.. அறையில் இருந்த காட்சி.. ஆடிப்போன உறவுகள்
பெங்களூர்: பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவர், பெங்களூர் மல்லேசுவரம் மண்டல பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா, திடீரென்று எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும்ஆடிப்போக வைத்துள்ளது. அவர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்த 42 வயதாகும் மஞ்சுளா என்பவர் பெங்களூரு மல்லேசுவரம் மண்டல பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா, கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா, திடீரென்று தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மஞ்சுளா வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், 'வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவித்து வருகிறேன். இதனால் மனமுடைந்து நான் இந்த முடிவை தேடி கொள்கிறேன். எனது இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது முடிவுக்கு நான் தான் காரணம்' என்று கூறப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை யஷ்வந்தபுரம் போலீசார் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்கள். கணவர் இறந்த துக்கத்தில் மஞ்சுளா இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மஞ்சுளாவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், மஞ்சுளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட்












Click it and Unblock the Notifications