மது விருந்தில் ராஜ போதை.. பெங்களூரில் நடுரோட்டில் இளம் பெண்ணிடம் போய்.. நினைக்கவே முடியாத ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் வெப் டிசைனராக பணியாற்றும் இளம் பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் 7ம் தேதி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் காயம் அடைந்த நாய்க்கு உதவி செய்ய காரை நிறுத்தியுள்ளார். காரில் இருந்து இறங்கி உதவியும் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றார். அவரது செயலை கண்டு அந்த பெண் கொதித்து போனார். குறிப்பிட்ட நபர் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
மது அருந்தினால் பலர் நிதானத்தை இழந்துவிடுவார்கள். மது போதையில் தவறாக பேசுவது, தவறாக நடந்து கொள்வது போன்ற காரியங்களில் பலர் ஈடுபடுகிறார்கள். மது போதை என்பது எப்படிப்பட்டவரையும் கெட்டவராக்கிவிடும். சில நேரங்களில் குற்றவாளியாகவும் ஆக்கிவிடும். மது போதையில் செய்யக்கூடாத வேலையை செய்தால் கம்பி தான் எண்ண வேண்டியது வரும். நான் போதையில் இருந்தேன். தெரியாமல் செய்தேன்..என்றெல்லாம் சொல்லவே முடியாது. பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

ஐடி நகரமான பெங்களூருவில் பல லட்சம் பெண்கள் மற்றும் ஆண்கள் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள். அந்த வகையில் இளம்பெண் ஒருவர், வெப் டிசைனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ந் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் இளம் பெண் காரில் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் வாகனம் மோதியதில் ஒரு நாய் காயம் அடைந்து கிடந்தது.
உடனே நாயை கண்ட இளம் பெண் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் நாயை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த இளைஞர் இளம் பெண்ணை தொடக்கூடாத இடத்தில் தொட்டாராம்.
இதனால் அப்பெண் கூச்சலிட்டார்.உடனே அங்கிருந்து சென்ற இளைஞர். சில நிமிடத்தில் மீண்டும் வந்து, 2-வது முறையாக இளம்பெண்ணுக்கு மீண்டும் தொடக்கூடாத இடத்தில் தொட்டு அசிங்கமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞர் ஸ்கூட்டரில் வேகமாக சென்றார். உடனே இளம்பெண், அவரது நண்பர்கள், அவரை விரட்டி சென்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்கூட்டரில் இருந்து வாலிபர் கீழே விழுந்து காயம் அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்து போலீசார் விரைந்து வந்தார்கள். ஆனால் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக எலகங்கா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்த மஞ்சுநாத் (வயது 28) என்பவரை கைது செய்தனர். கடந்த 7-ந் தேதி மதுவிருந்தை முடித்துவிட்டு வரும்போது இளம்பெண்ணிடம் சேட்டை செய்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications