மகளின் உடல் மீது ஏறி நின்ற ஸ்ருதி.. அடுத்து செய்த ஷாக்.. விடிந்ததும் வீட்டில் கணவன் பார்த்த கோலம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரை சேர்ந்த ராமண்ணா ஸ்ருதி தம்பதிக்கு 12 வயதில் பூர்விகா என்ற மகள் உள்ளார். சிவமொக்கா மெக்கான் அரசு மருத்துவமனையில் ஊழியராக ராமண்ணா பணியாற்றி வருகிறார். இவர் இரவு பணிக்கு சென்றுவிட்டு காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது மகள் மற்றும் மனைவி இருந்த நிலையை கண்டு ஆடிப்போனார். இதுபற்றி விசாரித்த போலீஸ் திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரை சேர்ந்த ராமண்ணா சிவமொக்கா மெக்கான் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதிக்கு 38 வயது ஆகிறது. இவரது மகள் பூர்விகாவுக்கு 12 வயது ஆகிறது. பூர்விகா அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். ராமண்ணா தனது மனைவி மற்றும் மகளுடன் சிவமொக்கா தொட்டபேட்டையில் உள்ள மெக்கான் மருத்துவமனை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 2ம் தேதி மருத்துவமனைக்கு ராமண்ணா இரவு பணிக்கு சென்றுவிட்டார். இதனால் ஸ்ருதியும், பூர்விகாவும் தனியாக வீட்டில் இருந்தனர். நேற்று காலை பணி முடிந்ததும் ராமண்ணா வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்திருக்கிறது. அவர் கதவை வெகு நேரமாக தட்டியும் இருவருமே திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராமண்ணா, ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது ஸ்ருதி தூக்கிலும், பூர்விகா தரையிலும் பிணமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமண்ணா கதறி அழுதார். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தார்கள்.
பின்னர் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தரையில் ரத்த வெள்ளத்தில் பூர்விகா பிணமாக கிடந்திருக்கிறார். அவளுக்கு மேலே மின்விசிறியில் ஸ்ருதி தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தொட்டபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்ருதி மனநிலை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாராம். இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு ராமண்ணா வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் ஸ்ருதி தனது மகள் பூர்விகாவை அரிவாளால் வெட்டி கொன்றாராம்.
பின்னர் மகள் பூர்விகாவின் உடல் மீது ஏறி நின்று மின்விசிறியில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தொட்டபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications