பெங்களூருவில் ரயில் வந்த அந்த நொடி.. மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில்.. ஆடிப்போன பொதுமக்கள்
பெங்களூர்: பெங்களூரு சல்லக்கட்டா-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை 8.45 மணியளவில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்ற ஒரு வாலிபர் திடீரென்று தண்டவாளத்திற்குள் குதித்தார். அந்த சந்தர்ப்பத்தில் மெட்ரோ ரயில் அவர் மீது ஏறியது. இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் ஊதா, பச்சை, மஞ்சள் என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. இதில் ஊதா நிற வழித்தடம் பெங்களூரின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது. இதில் தான் வைட்ஃபீல்டு பகுதியிலுள்ள தகவல் ஐடி நிறுவனங்கள், கே.ஆர். புரம் (KR Pura), எம்.ஜி. சாலை மற்றும் மெஜஸ்டிக் போன்றவற்றை இணைக்கிறது.

அடுத்ததாக பச்சை நிற வழித்தடத்தை பொறுத்தவரை பெங்களூரின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை இணைக்கிறது. யஷ்வந்த்பூர் , மெஜஸ்டிக், லால்பாக் மற்றும் சில்க் இன்ஸ்டிடியூட் போன்றவற்றை இணைக்கிறது. அடுத்ததாக மஞ்சள் நிற வழித்தடம் தென் பெங்களூரை நகரின் தென்மேற்குப் பகுதிகளுடன் இணைக்கிறது. இதில் ராஷ்ட்ரீய வித்யாலயா சாலை , பொம்மனஹள்ளி மற்றும் எலெக்ட்ரானிக் சிட்டி போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களை இணைக்கிறது. இதில் ஊதா வழித்தடத்தில் சல்லக்கட்டா-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையம் அமைந்திருக்கிறது.
மிகவும் பரபரப்பான இந்த பகுதியில், நேற்று காலை 8.45 மணியளவில் கெங்கேரி மெட்ரோ ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்ற ஒரு இளைஞர் திடீரென்று தண்டவாளத்திற்குள் குதித்தார். அந்த சந்தர்ப்பத்தில் மெட்ரோ ரயிலும் வந்ததால், வாலிபர் மீது மெட்ரோ ரயில் ஏறியது. இதன் காரணமாக அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி உடனடியாக கெங்கேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்து. போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தண்டவாளத்துக்குள் இருந்து வாலிபரின் உடலை போலீசார் மீட்டனர். அவரது சட்டையில் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்தன. அதன்மூலம் தற்கொலை செய்த வாலிபர் விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த 38 வயதாகும் சாந்தனகவுடா பட்டீல் என்று அடையாளம் கண்டனர். அவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரிந்தது.
பெங்களூரு அருகே தொட்டபெலேயில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சாந்தனகவுடா தனது குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். பொறியியல் படித்துள்ள அவர் முதலில் பிடதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றியுள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக சாந்தனகவுடா வேலை செய்திருக்கிறார். நிதி நெருக்கடியால் சிக்கி தவித்த சாந்தனகவுடா வாழ்க்கையில் விரக்தி அடைந்து மெட்ரோ ரயில்முன் பாய்ந்து உயிரை விட்டிருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் விசாரணை நடந்து வருகிறது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
ஆர்எஸ்எஸ் தலைவர் பயணித்த ரயில் பெட்டியில் கல்வீச்சு.. உடைந்து சிதறிய கண்ணாடி.. 2 பேர் அதிரடி கைது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications