லிப்ட்டில் நடந்த அக்கப்போர்.. இளைஞரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்.. ஒரே அலறல்.. என்ன நடந்தது?
லிப்ட்டில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
பெங்களூரு: லிப்ட்டில் நடந்த கொடுமைக்காக இளைஞரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.. அப்படி என்ன நடந்தது?
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஹேலயங்கடி என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்..
திருமணமானவர்.. ஆனால், கணவருடன் கருத்து மோதல்கள் இருந்து கொண்டே இருந்தது.. தினம் தோறும் சண்டை, பிரச்சனைகள் காரணமாக, அவரை விட்டு தனியாக பிரிந்து வந்துவிட்டார்.

இளம்பெண்
தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வருகிறார்.. அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.. அப்போதுதான், சிவராஜ் குலால் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.. அவருக்கு 28 வயதாகிறது.. பண்ட்வாலை சேர்ந்தவர்.. ஆரம்பத்தில் இருவருமே நட்புடன்தான் பழகி வந்தனர்.. ஆனால், கடந்த 6 மாதங்களாக அவரது நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது.

லவ் டார்ச்சர்
திடீரென அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லி உள்ளார்.. இதனால் அதிர்ந்து போன அந்த பெண், அவரது காதலை ஏற்கவில்லை.. உடனடியாக மறுப்பும் சொல்லிவிட்டார்.. இதற்கு காரணம், அந்த இளைஞர் தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்றும், தன்னை பாலியல் ரீதியாக அனுபவிக்கவே இவ்வாறு லவ் என்ற பெயரில் டார்ச்சர் செய்து வருவதையும் அந்த பெண் அறிந்து வைத்திருந்தார்.. அதனால்தான், காதலுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராது என்று தெரிவித்துவிட்டார்.

டார்ச்சர்
ஆனால் சிவராஜ் அடங்கவே இல்லை.. பாலியல் தொல்லைகள் தர ஆரம்பித்தார்.. லவ் என்று ஆரம்பித்து, இப்போது பாலியல் தொல்லை கொடுக்கவும் அந்த பெண் மேலும் எரிச்சலடைந்தார்.. உண்மை காதலாக இருந்தால், இப்படியா நெருக்கடி தந்து பாலியல் சீண்டல்களை செய்வது என்று அந்த பெண் நேரடியாக கேட்டுள்ளார்.. தொடர்ந்து இந்த தொல்லை இருக்கவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்..

சிவராஜ்
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிவராஜ், இந்த பெண் வேறு யாரையும் காதலித்துவிடக்கூடாது, வேறு யாருக்கும் கிடைக்கவும் கூடாது என்று முடிவெடுத்து அவரை கொலை செய்ய முடிவுக்கு வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வேலை பார்க்கும் ஆபீசுக்கு சென்றார்.. அங்கு சென்றும் ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.. இதனால் அந்த பெண் கடுமையாக பேசி, அவரை திட்டிவிட்டு, ஆபீஸ் லிப்டில் ஏறி இருக்கிறார்... உடனே சிவராஜ்ஜும் லிப்டுக்குள் புகுந்துவிட்டார்.. லிப்ட் புறப்பட்டபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்தார்..

சீரியஸ்
லிப்ட் நின்றதுமே, அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடிவிட்டார்.. இதை பார்த்த பொதுமக்கள், லிப்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.. இப்போது அந்த பெண் சீரியஸாக இருக்கிறாராம்.. மங்களூர் புறநகர் போலீசார் இதுகுறித்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.. சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி, சிவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. ஆனால், சிவராஜ் எங்கே என்று தெரியவில்லை.. உடனே தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்துள்ளனர்..!












Click it and Unblock the Notifications