கர்நாடகாவில் ஆசிரியரை நோக்கி சென்ற 3-ம் வகுப்பு மாணவி.. கனவில் கூட யாரும் நம்பவே முடியாத சம்பவம்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம், தமிழ்நாட்டின் ஈரோடு, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள மாவட்டம் ஆகும். இஙகுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது மாணவி, சாம்ராஜ்நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை காண்பிக்க வந்த போது, திடீரென அந்த சம்பவம் நடந்தது. மொத்த வகுப்பறையும் நடந்த சம்பவத்தை பார்த்து ஆடிப்போனது..
2020ம் ஆண்டு நாடு முழுவதும் கொரோனா முதல் அலை வந்தது. அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.. ஆனால் இரண்டாம் அலை 2021ம் ஆண்டு வந்த போது, மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பலர் மாரடைப்பால் காலமானார்கள், கொரோனா பாதிப்பால் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் மரணம் அடைவது அதிகரித்துள்ளது.

சிறு குழந்தைக்கு கூட மாரடைப்பு ஏற்படுவதை கண்டு பலர் நொறுங்கி போய் இருக்கிறார்கள். ஏனெனில் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாரடைப்பால் பள்ளி மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே உள்ள கிராமம் பதனகுப்பே. இந்த கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியின் ஒரே மகள் தேஜஸ்வினிக்கு 6 வயது ஆகிறது. தேஜஸ்வினி சாம்ராஜ் நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜனவரி 6ம் தேதியான நேற்று காலை சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க தேஜஸ்வினி சென்றுள்ளார்.
ஆசிரியரை சந்திக்க நடந்து சென்ற போது, திடீரென்று மாணவி தேஜஸ்வினி மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் மாணவி தேஜஸ்வினியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது 8 வயதே ஆகும் மாணவி தேஜஸ்வினி ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வெறும் 8 வயதே ஆகும் மாணவி தேஜஸ்வினி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கள் மகள் மாரடைப்பால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த தேஜஸ்வினியின் பெற்றோர், ஒரே மகளை இழந்து விட்டதை நினைத்து சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications