குபீர் குபீரென வந்து வண்டியை மறிக்கும் டிராபிக் போலீசாரால் .. கர்நாடகாவே ஆடிப்போன சோக சம்பவம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர், தனது மனைவி வாணி மற்றும் 3 வயது மகள் ஹிருத்திஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அசோக்கின் 3 வயது மகளை நாய் கடித்துள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு சென்றவர்களை வழியில் போக்குவரத்து போலீசார் மடக்கி ஹெல்மெட் போடாதது குறித்து கேட்டுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை போகவிடாமல் தடுத்த போது, நடக்க கூடாத சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் கண் எதிரே குழந்தைக்கு நடந்த சம்பவம் மொத்த கார்நாடகாவையும் ஆடிப்போக வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த அசோக் மற்றும் வாணி தம்பதிக்கு 3 வயதில் ஹிருதிக்ஷா என்ற மகள் உள்ளார். நேற்று காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்ஷாவை அந்த பகுதியில் உள்ள ஒரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயம் அடைந்த குழந்தை ஹிருதிக்ஷாவை சிகிச்சைக்காக அசோக்கும், வாணியும் பைக்கில் மண்டியாவில் உள்ள மிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

செல்ல முயற்சி
அப்போது மண்டியா நகர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் அசோக்கும், வாணியும் ஹெல்மெட் அணியாமல் மகள் ஹிருதிக்ஷாவுடன் அந்த வழியாக வந்ததை கவனித்த போக்குவரத்து போலீசார், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது மகளுக்கு நாய் கடித்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவசரமாக செல்ல வேண்டும் என்றும் கூறி அசோக் அங்கிருந்து செல்ல முயற்சித்துள்ளார்.
போலீசார் தடுத்தனர்
ஆனால் போக்குவரத்து போலீசார் அவர்களை செல்ல விடாமல் அவரது பைக்கை ஆவேசமாக இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அசோக்கின் பைக் நிலை தடுமாறி சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பேரும் சாலையில் தவறி விழுந்தனர். இந்த விபத்தில் குழந்தை ஹிருதிக்ஷா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். அசோக்கும், வாணியும் காயமின்றி உயிர் தப்பினர்.
போலீசுக்கு எதிராக போராட்டம்
பின்னர் உயிரிழந்த ஹிருதிக்ஷாவின் உடலை மடியில் வைத்து கொண்டு சாலையில் அமர்ந்து கணவன்-மனைவி கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அசோக் மற்றும் வாணி தம்பதி, போலீசாரின் அலட்சியத்தால் தான் தங்கள் மகள் உயிரிழந்து விட்டதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
எஸ்பி வருகை
இதை பார்த்த மண்டியா நகர் மக்கள், குழந்தையின் பெற்றோருக்கு ஆதரவாக திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். அதேநேரம் நடந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரிய பிரச்சனையானது. பலரும் போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா மாவட்ட எஸ்பி மல்லிகார்ஜுன பாலதண்டி நேரடியாக விரைந்து வந்தார். போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி மற்றும் மக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து போராட்டத்தை கைவிடச் செய்தார்.
போலீஸ் சஸ்பெண்ட்
அத்துடன் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாண்டியா மாவட்ட எஸ்பி மல்லிகார்ஜுன பாலதண்டி அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று கர்நாடாகவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications