பெங்களூர் நர்சு மமதாவுக்கு 39 வயது.. 28 வயது காதலன் சுதாகர்.. எக்குத்தப்பாக முடிந்த கல்யாண ஆசை
பெங்களூர்: பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பிரகதி லே-அவுட்டில் மமதா என்பவர் வசித்து வந்தார். இவர் பெங்களூரு ஜெயதேவா அரசு மருத்துவமனையில் நர்சாக மமதா வேலை பார்த்து வந்தார். அவர், பிரகதி லே-அவுட்டில் தனது தோழியுடன் வசித்து வந்தார். ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். காதலனை திருமணம் செய்ய விரும்பினார். இறுதியில் அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பெங்களூரு குமாரசாமி லே-அவுட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிரகதி லே-அவுட்டில் வசித்து வந்த 39 வயதாகும் மமதாவுக்கு சொந்த ஊர் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் ஆகும். இவர் பெங்களூர் ஜெயதேவா அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அவர் பிரகதி லே-அவுட்டில் தனது தோழியுடன் வசித்து வந்திருக்கிறார்.

கடந்த டிசம்பர் 24-ந்தேதி மமதாவின் தோழி, அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் மமதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு மமதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மமதா உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதலில் மமதாவுடன் வசித்த அவரது தோழியிடம் போலீசார் விசாரித்தனர். மமதா கடைசியாக யாருடன் செல்போனில் பேசினார்? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டினா். அப்போது தான் மமதாவும், குமாரசாமி லே-அவுட்டை சேர்ந்த 28 வயதாகும் சுதாகர் என்பவரும் காதலித்ததுடன், அவருடன்தான் மமதா கடைசியாக பேசி இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மமதாவை சுதாகர் தான் கொலை செய்திருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, நேற்று காலையில் சுதாகரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுதாகரும் அதே மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றியது தெரியவந்தது. அதனால் மமதாவுக்கும், சுதாகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது. ஆனால் சுதாகருக்கு, அவரது குடும்பத்தினர் திருமணத்துக்காக பெண் தேடிவந்துள்ளனர். சமீபத்தில் ஒரு இளம்பெண்ணுக்கும், அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்த மமதா தன்னை திருமணம் செய்யும்படி சுதாகரை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் மமதாவை திருமணம் செய்ய சுதாகர் மறுத்து விட்டார். குறிப்பாக தன்னை விட மமதாவுக்கு வயது அதிகம் என்பதால், இந்த திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்று சுதாகர் திட்டவட்டமாக கூறினாராம். தொடர்ந்து வற்புறுத்தியதால், சம்பவம் நடந்தஅன்று இரவு மமதா வீட்டுக்கு சுதாகர் சென்றுள்ளார். அப்போதும் தன்னை திருமணம் செய்யும்படி மமதா வற்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுதாகர் மமதா கழுத்தை கொலை செய்தது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு பின்னர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications