கர்நாடகாவில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற மாணவி.. பெற்றோருக்கு தெரிந்ததுமே.. இப்படியாக ஆகணும்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையைச் சேர்ந்த சந்திரிகா என்ற இளம் பெண் கதக் டவுனில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். சந்திரிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் சந்திரிகாவின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதனால் மாணவி சந்திரிக்கா பீஷ்மா ஏரிக்கு சென்றார். அங்கு அவர் இருந்த கோலம், பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஷிருர் கிராமத்தை சேர்ந்த 21 வயதாகும் மாணவி சந்திரிகா என்பவர் கதக்கில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கதக் டவுனில் உள்ள லட்சுமிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் சந்திரிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்காமல் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் சந்திரிகாவின் பெற்றோர் அவரை கண்டித்ததுடன், ஊர் சுற்றுவதை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்து என்று கண்டிப்புடன் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்த சந்திரிகா தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று முன்தினம் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டார். பின்னர் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரிகாவுடன் தங்கியிருந்த நண்பர்கள், இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனால் அவர்கள் சந்திரிகாவை பல இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்திரிகாவின் பெற்றோர் கதக் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசாரும் சந்திரிகாவை தேடினார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் பீஷ்மா ஏரியில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். இதையடுத்து ஏரியில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது, அது மாயமான சந்திரிகா தான் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு சென்றதை பெற்றோர் கண்டித்ததால், அவர் ஏரியில் குதித்து உயிரைவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கதக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications