Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் அருகே குளியலறைக்கு போன இளம்பெண்.. அத்துமீறிய பக்கத்து வீட்டு இளைஞர்.. இறுதியில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் அடுத்த ராமநகர் மாவட்டம் பிடதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு லே-அவுட்டில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த மன்சூர் ஆலம் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று தனது வீட்டின் பின்புறம் குளியலறையில் குளிக்க சென்றுள்ளார். பின்னாலேயே சென்ற அஸ்ஸாம் வாலிபர், அவரை வலுகட்டாயமாக தனது வீட்டிற்குள் தூக்கி வந்து அத்துமீறினாராம். இந்த வழக்கில் போலீசார் அஸ்ஸாம் வாலிபரை கைது செய்தனர்.


பெங்களூரின் புறநகர் பகுதியான ராமநகர் மாவட்டம் பிடதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு லே-அவுட்டில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுடைய வீட்டின் அருகேயே அசாம் மாநிலத்தை சேர்ந்த 24 வயதாகும் மன்சூர் ஆலம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த குறிப்பிட்ட இளம் பெண், மாலையில் தன்னுடைய வீட்டின் பின்புறம் உள்ள குளியலறைக்கு இளம்பெண் குளிப்பதற்காக சென்றாராம்.

bangalor crime



இளம் பெண் குளித்து விட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் அங்கு காத்திருந்த மன்சூர் ஆலம், திடீரென இளம்பெண்ணை தன்னுடைய வீட்டுக்குள் குண்டு கட்டாக தூக்கி சென்றுவிட்டாராம். பின்னர் தன்னுடைய வீட்டில் வைத்து இளம்பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மன்சூர் ஆலம் வீட்டில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ஓடிவந்துள்ளார்கள்.

அப்போது தான் குளியலறைக்கு சென்ற பெண்ணை தூக்கி வந்து மன்சூர் ஆலாம் அத்துமீறியது அவர்களுக்கு தெரியவந்தது. பொதுமக்கள் தன்னை சுற்றி வளைப்பதை கண்ட மன்சூர் ஆலம், வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிச் செல்ல முயன்ற மன்சூர் ஆலமை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் அவரை பிடதி போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளார்கள். இதையடுத்து இளம் பெண் பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் ஆலமை போலீசார் கைது செய்தார்கள்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் ஆலம் ராமநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததது தெரியவந்தது. இதற்கிடையில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண் ரத்த காயங்களுடன் இருந்ததால் அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ராம்நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+