தொகுதி மறுவரையறை தாமதமானால்.. தென்னிந்தியாவிற்கு சிக்கல்? தேஜஸ்வி சூர்யா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி தனது எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவில், "தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக லாபத்தையே தரும்" என்று வாதிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை தாமதமானால் அல்லது மேற்கொள்ளப்படாவிட்டால்,அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு சட்டப்பிரிவுகள் 81, 82 மற்றும் 330A தானாகவே செயல்படுத்தப்படும். இது, தற்போதுள்ள 543 இடங்களையும் மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே மறுபங்கீடு செய்ய வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி தனது எக்ஸ் தளத்தில் போட்டிருக்கும் பதிவில், தொகுதி மறுவரையறை தாமதமானால் அல்லது மேற்கொள்ளப்படாவிட்டால் என்ன நடக்கும்? எதுவும் செய்யப்படாவிட்டால், அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பிறகு சட்டப்பிரிவுகள் 81, 82 மற்றும் 330A தானாகவே செயல்படுத்தப்படும்.

What happens if delimitation is delayed or not undertaken Tejasvi Surya explains

இது, தற்போதுள்ள 543 இடங்களையும் மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே மறுபங்கீடு செய்ய வழிவகுக்கும். கேரளாவை எடுத்துக்கொண்டால், இன்று 20 இடங்களாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, 2027-ஆம் ஆண்டின் கணிக்கப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் மறுபங்கீடு செய்யப்பட்டால் 14 ஆகக் குறையக்கூடும். மோடி அரசின் முன்மொழிவு இதற்கு நேர்மாறாக, தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதோடு இடங்களையும் அதிகரிக்கிறது. இது இழப்பல்ல, ஆதாயத்திற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டு." இவ்வாறு கூறியுள்ளார்.

தேஜஸ்வி சூர்யா இதில் சொல்லும் 3 முக்கிய பாயிண்டுகளை சற்று விரிவாக பற்றி பார்ப்போம்.

இப்போது மறுவரையறை செய்யாவிட்டால் ஆபத்து என்கிறார். ஏனெனில் சட்டப்பிரிவுகள் 81, 82 மற்றும் 330A-வின் படி, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன் தானாகவே தொகுதிகள் மாற்றியமைக்கப்படும். அப்படிச் செய்தால், இப்போதுள்ள 543 இடங்களை அப்படியே வைத்துக்கொண்டு, மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுப்பார்கள். இப்போது கேரளாவிடம் 20 இடங்கள் உள்ளன. ஆனால் மக்கள் தொகை குறைந்திருப்பதால், இந்த முறையின்படி பார்த்தால் கேரளாவுக்கு 14 இடங்கள் மட்டுமே கிடைக்கும் (6 இடங்கள் பறிபோகும்). இதுதான் தென் மாநிலங்களுக்கு உண்மையான இழப்பு என்கிற அர்த்ததில் கூறியுள்ளார்.

மோடி அரசின் திட்டம் என்ன?

பாஜக அரசு தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது (சுமார் 848 இடங்கள் வரை). இதன் மூலம் எந்த மாநிலத்திற்கும் இப்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கை குறையாது.ஒவ்வொரு மாநிலத்திற்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, ஒரு மாநிலத்திற்கு 20 இடங்கள் இருந்தால் அது 25 ஆக உயருமே தவிர, குறையாது. இது இழப்பு அல்ல, லாபம் என்பதை தான் தேஜஸ்வி சூர்யா கூற வருகிறார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசியபோது, காங்கிரஸ் இது குறித்துத் தவறான அச்சத்தை உருவாக்குவதாகவும், மோடி அரசின் திட்டம் தென் மாநிலங்களின் குரலை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்பட எதிர்க்கட்சிகளின் பார்வை என்ன.. தேஜஸ்வி சூர்யா சொல்வது போல எண்ணிக்கை வேண்டுமானால் அதிகரிக்கலாம். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதிகார விகிதாச்சாரம் என்னவாகும் என்பதுதான் இப்போதைய கேள்வி. தமிழ்நாட்டிற்கு 39-லிருந்து 59 இடங்களாக உயர்ந்தாலும், உத்தரப் பிரதேசத்திற்கு 80-லிருந்து 140-க்கும் மேலாக உயரும்.

அப்போது நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் ஒட்டுமொத்தப் பங்கு (Percentage) குறைந்துவிடும். தேஜஸ்வி சூர்யா "எங்களிடம் யாரும் இடங்களைப் பறிக்கவில்லை, அதிகப்படுத்துகிறோம்" என்று கணக்குக் காட்டுகிறார். ஆனால் தென் மாநில மக்களின் அச்சம் என்னவென்றால், "எங்களுக்கு 20 இடங்கள் கூடினால், வடமாநிலங்களுக்கு 80 இடங்கள் கூடுகிறது; அப்போது டெல்லியில் தமிழகத்தின் குரல் எடுபடாமல் போய்விடுமே" என்பதுதான் எங்களின் கேள்வி என திமுக தரப்பு வாதிடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+