சிவகுமார் ஓகே.. அது என்ன டிகே தெரியுமா? சுவாரசிய காரணம் இருக்கு!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ‛டாப்' தலைவர்களில் ஒருவராகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனது தந்திரங்களால் மிரளவிடும் தலைவராக இருப்பவர் தான் டிகே சிவக்குமார். கர்நாடகா மாநில துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் பெயரில் உள்ள ‛டிகே' என்பதற்கான அர்த்தம் என்ன? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வரும் டிகே சிவக்குமார் முதல்வர் பதவியை பெற முயன்ற நிலையில் அது நடக்கவில்லை. காங்கிரஸ் மேலிடம் அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கி உள்ளது. இந்நிலையில் டிகே சிவக்குமார் யார் என்பது பற்றிய விபரம் வருமாறு:
டிகே சிவக்குமார் தனது கல்லூரி காலத்திலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட தொடங்கினார். 1980 காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பில் செயல்பட தொடங்கினார். அதன்பிறகு தனது 27 வயதில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 1989 1994, 1999, 2004 ஆகிய சட்டசபை தேர்தலில் சாத்தனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் 1999ல் சாத்தனூர் தொகதியில் ஜேடிஎஸ் கட்சியின் எச் டி குமாரசாமியை (மாஜி முதல்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன்) தோற்கடித்தார். அதன்பிறகு 2008, 2013, 2018, 2023 ஆகிய தேர்தல்களில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர் தான் போட்டியிட்ட அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் கூட கடந்த 2002ல் கனகபுரா நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்தார். முன்னாள் பிரதமரான தேவேகவுடாவை எதிர்த்து டிகே சிவக்குமார் போட்டியிட்ட நிலையில் சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மாறாக அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 8 வது முறையாக அவர் எம்எல்ஏவாகி உள்ளார்.
இதற்கு முன்பு சிறைத்துறை, நகர வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்ப்பாசனத்துறை, மருத்துவக்கல்வித்துறைகளை டிகே சிவக்குமார் நிர்வகித்துள்ளார். மேலும் கர்நாடகா மாநில காங்கிரஸ் செயல்தலைவராகவும், தற்போது காங்கிரஸ் தலைவராகவும் அவர் செயல்பட்டு வரும் நிலையில் தான் அவர் தற்போது துணை முதல்வராகி உள்ளார்.
மேலும் இவர் பல கடினமான சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பக்கபலமாக இருந்தார். குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாதுகாக்க வேண்டும் என்றாலும் அந்த கட்சி தொடர்பு கொள்ளும் ஒரே நபர் டிகே சிவக்குமார் தான். இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
கடந்த 2002 ல் மகாராஷ்டிரா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் விலாஸ்ராவ் தேஷ்முக் இருந்தார். அப்போது அவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த வேளையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை டிகே சிவக்குமார் தான் பெங்களூர் அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கவைத்து அனுப்பி வைத்தார். டிகே சிவக்குமாரின் இந்த நடவடிக்கையால் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் அரசு தப்பியது.
அதன்பிறகு கடந்த 2017 ல் குஜராத்தில் ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தியின் உதவியாளராக இருந்த அகமது படேல்(தற்போது மறைந்துவிட்டார்) போட்டியிட்டார். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக கவர்ந்து செல்ல திட்டமிட்டது. இந்த வேளையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூர் அருகே ரெசார்ட்டில் டிகே சிவக்குமார் தங்கவைத்து அமித்ஷாவையே மிரள வைத்தார். மேலும் குஜராத்தில் இருந்து அகமது படேல் வெற்றி பெற்றார். இதையடுத்து டிகே சிவக்குமாரின் வீடுகளில் சிபிஐ, அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி அவர் சிறை சென்றார்.

அதன்பிறகு கர்நாடகாவில் 2018ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 104 எம்எல்ஏக்கள் இருந்தாலும் கூட காங்கிரஸ் -ஜேடிஎஸ் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சி அமைய டிகே சிவக்குமார் தான் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் இந்த அரசு அடுத்த ஓராண்டில் கவிழ்ந்தது. இவ்வாறு சிக்கலில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் வெற்றியை தேடிதரும் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் ‛ட்ரபுள் சூட்டர்' என்ற புனைப்பெயருடன் வலம் வருபவர் தான் இந்த டிகே சிவக்குமார்.
இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் பெயரின் முன்னால் இருக்கும் ‛டிகே' என்பதன் பின்னணியில் உள்ள அர்த்தம் வெளியாகி உள்ளது. அதாவது டிகே சிவக்குமாரின் தந்தை பெயர் கெம்பேகவுடா. தாய் பெயர் கவுரம்மா. இதில் தந்தையின் முதல் எழுத்தான ‛கே'வை அவர் பயன்படுத்துகிறார். மாறாக டி என்பது அவரது ஊரை குறிக்கும் வகையில் உள்ளது. ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா தொட்டஆலஹள்ளி என்பது தான் டிகே சிவக்குமாரின் சொந்த கிராமமாகும். இதில் தொட்டஆலஹள்ளியின் ஆங்கில முதல் எழுத்தான ‛டி'-யை அவர் தனது பெயரின் முதல் எழுத்தாக பயன்படுத்தி வருகிறார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் பல தலைவர்கள் தங்களின் பெயருடன் சொந்த கிராமத்தின் பெயரை இணைத்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் தான் டிகே சிவக்குமாரும் தனது பெயருடன் கிராமத்தின் பெயரை இணைத்துள்ளார். அதன்படி பார்த்தால் டிகே சிவக்குமாரின் முழுப்பெயர் என்பது ‛‛தொட்டஆலஹள்ளி கெம்பகேவுடா சிவக்குமார்' என்பதாகும்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications