Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாதம் 2 முறை சிக்கன், தினக்கூலி ரூ.540.." பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் கிடைக்கும் சலுகைகள் என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணா இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எம்பியாக மாதம் ரூ.1 லட்சம் மேல் சம்பளம் பெற்ற அவர், இப்போது சிறையில் தினசரி ஊதியமாக ரூ.540க்கு வேலைக்குப் போகவுள்ளார். அவருக்கு என்ன வேலை வழங்கப்படும்.. சிறையில் அவருக்கு என்ன உணவு வழங்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்,

கர்நாடகாவில் கடந்தாண்டு ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பாலியல் புகார்கள் வெளியாகி பகீர் கிளப்பியது. இது அப்போது நாடு முழுக்கவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டாக நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் தான் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

What is Prajwal Revanna s Life in Prison From Rs 540 Labour Wage to weekly once non veg

பிரஜ்வல் ரேவண்ணா

கடந்த ஆண்டு ஏப்ரல் 2024 வரை எம்.பி.யாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, அப்போது எம்பியாக மாதம் ₹1.2 லட்சம் சம்பளத்துடன் பல்வேறு சலுகைகளைப் பெற்று வந்தார். ஆனால், இப்போது அவர் ஆயுள் தண்டனை கைதியாக (எண்: 15528) பெங்களூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இனி அவர் தினசரி எட்டு மணி நேரம் என்று வாரத்தில் ஆறு நாட்கள் உழைக்க வேண்டும். அப்போதும் அவருக்குக் கைதிகளுக்கான தினசரி ஊதியமான ₹540 மட்டுமே கிடைக்கும்.

சிறை விதிமுறைகளின்படி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் அனைத்து கைதிகளும் வேலை செய்யலாம். இருப்பினும், பிரஜ்வலுக்கு இதுவரை எந்த வேலையும் ஒதுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகச் சிறை வட்டாரங்கள் கூறுகையில், "புதிய கைதிகளுக்கு பொதுவாக ரொட்டி தயாரிப்பில் உதவுவது அல்லது தையல் என அடிப்படை வேலைகளை ஒதுக்கப்படும். ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர்கள் தகுதியானவர்களாகக் கருதப்பட்டால், நெசவு தொழில் உள்ளிட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கலாம்" என்றார்.

தினசரி சம்பளம்

ஹாசன் முன்னாள் எம்பியான பிரஜ்வல், கடந்த வெள்ளிக்கிழமை தான் விசாரணை கைதிகள் பிரிவில் இருந்து தண்டனை கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். எனவே, இன்று அல்லது நாளை வரை அவர் தனது வேலையைத் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திங்கட்கிழமையும், புதிய கைதிகளுக்கு அவர்களின் பணிகள் ஒதுக்கப்படும். வேலையின் தன்மை எதுவாக இருந்தாலும், தினசரி சம்பளமாக ₹540 மட்டுமே வழங்கப்படும். கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் நிச்சயம் வேலை செய்தே தீர வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்

சிறையில் வாழ்க்கை

உடல்நலக் காரணங்களுக்காக விலக்கு பெற்றவர்களைத் தவிர மற்ற அனைத்து கைதிகளும் தங்கள் காலை 6:30 மணிக்கு எழ வேண்டும். பிறகு காலை உணவு வழங்கப்படும். காலை உணவைக் குறித்து பெங்களூர் சிறை அதிகாரிகள் கூறுகையில், "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு சுழற்சி முறையில் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமை வெஜ் புலாவ், திங்கட்கிழமை தக்காளி பாத், செவ்வாய்க்கிழமை சித்ரன்னா, புதன்கிழமை போஹா, வியாழக்கிழமை புளியோதரை, வெள்ளிக்கிழமை உப்புமா, மற்றும் சனிக்கிழமை வாங்கீபாத் வழங்கப்படும்" என்றார்.

உணவு என்ன

மதிய உணவைப் பொறுத்தவரை அது காலை 11:30 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் பரிமாறப்படும். அனைத்து கைதிகளும் மாலை 6:30 மணிக்குள் தங்கள் செல்களுக்கு திரும்ப வேண்டும். மதிய மற்றும் இரவு உணவுகளில் சப்பாத்தி, ராகி உருண்டைகள், சாம்பார், சாதம் மற்றும் மோர் ஆகியவை இருக்கும். செவ்வாய்க்கிழமைகளில் கைதிகளுக்கு ஒரு முட்டை வழங்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் ஆட்டிறைச்சியும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழி இறைச்சியும் கைதிகளுக்கு வழங்கப்படும்.

மற்ற கைதிகளைப் போலவே பிரஜ்வலும் வாரத்திற்கு இரண்டு முறை குடும்பத்தினருடன் தொலைப்பேசி மூலம் உரையாடலாம். ஒவ்வொரு அழைப்பும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். மேலும், அவர் வாரத்திற்கு ஒரு முறை குடும்பத்தினர் அல்லது நண்பர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்படுவார்.

குற்றச்சாட்டு

பிரஜ்வல் சிறையில் இருக்கும் அதேநேரம் ஏற்கனவே கர்நாடகாவில் பணிபுரியும் பல ஆயிரம் கைதிகளுக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.. இது தொடர்பாகச் சிறை வட்டாரங்கள் கூறுகையில் "மாநிலம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்குச் சேர வேண்டிய சுமார் ₹3 கோடி ஊதிய பணம் நிலுவையில் உள்ளது" என்றனர். கர்நாடகாவில் மொத்தம் எட்டு மத்தியச் சிறைகள் மற்றும் பல மாவட்ட சிறைகளில் சுமார் 14,500 கைதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+