"இரண்டும் கைக்குழந்தை ஆச்சே!" பெங்களூரில் HMPV உறுதியான குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன? மேஜர் தகவல்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று ஒரே நாளில் இரண்டு குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அந்த இரு குழந்தைகளும் இப்போது எப்படி இருக்கிறார்கள்.. அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சீனாவில் புத்தாண்டு சமயத்தில் ஹெச்எம்பிவி தொற்றின் ஒரு திரிபு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. இதனால் அங்குப் பலர் மருத்துவமனையில் அட்மிட் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் இன்று ஒரே நாளில் பெங்களூரில் இரண்டு குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதியானது. அதேபோல குஜராத்தின் அகமதாபாத்தில் கூட ஒரு குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஹெச்எம்பிவி தொற்று:
கர்நாடகாவில் இரு கேஸ்கள் உறுதியான நிலையில், அம்மாநில அரசு இது தொடர்பாக சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் சுவாச நோய்ப் பாதிப்பு தொடர்பான அறிகுறி ஏதேனும் இருந்தால் பொது இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நோய் பரவும் ஆபத்தைக் குறைக்க நெரிசலான பகுதிகளில் மாஸ்க் அணிந்து செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்:
ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எட்டு மாத ஆண் குழந்தை நலமாக இருப்பதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்படும் என்றும் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இதைக் கண்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இது புதிய வைரஸ் இல்லை.. ஏற்கனவே இருக்கும் வைரஸ் தான். மேலும், நாட்டிலேயே இப்போது தான் இது முதலில் கண்டறியப்படுகிறது என்று சொல்ல முடியாது.
ஏற்கனவே இருக்கும் வைரஸ்தான். வைரஸ் பாதிப்பு காரணமாகச் சிலருக்குச் சுவாசக் கோளாறு ஏற்படும். இந்த வைரஸ் முதன்முதலில் 2001இல் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. மக்கள் இதனால் பீதி அடைய வேண்டாம். இது தொடர்பாக ஏற்கனவே மாநில அரசு சார்பில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய அரசுகளுடன் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
சீனாவில் பரவுவது எந்த திரிபு::
இந்த வைரசில் குறிப்பிட்ட ஒரு திரிபு சீனாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், பெங்களூரில் இப்போது அந்த திரிபு தான் கண்டறியப்பட்டுள்ளதா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அம்மாநில அமைச்சர் தினேஷ் குண்டுராவ், "தற்போதைய சூழலில் இந்த திரிபு சீனாவில் இருந்து வந்ததா என்பது எங்களுக்குத் தெரியாது. அதேநேரம் அவர்கள் சர்வதேச பயணங்கள் எதையும் செய்யவில்லை. சமீபத்தில் திருப்பதிக்கு மட்டுமே போய்விட்டு வந்துள்ளனர்" என்றார்.
சீனா தனது நாட்டில் பரவும் ஹெச்எம்பிவி வைரஸ் தொற்றின் திரிபு தொடர்பாகப் பொதுவெளியில் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இனால் அங்கு என்ன வகை பாதிப்பு பரவுகிறது என்பது நமக்குத் தெரியாது. இதன் காரணமாகவே இப்போது நமது நாட்டில் கண்டறியப்பட்டுள்ள ஹெச்எம்பிவி வைரசும் சீனாவில் பரவும் திரிபும் ஒன்று தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு ஹெச்எம்பிவி தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த இரு குழந்தைகள் தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளின் தற்போதைய நிலை:
முதல் குழந்தை பெங்களூரில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. அந்த மூன்று மாத பெண் குழந்தைக்கு ஏற்கனவே இதற்கு முன்பு மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போதைய ஹெச்எம்பிவி தொற்று குணமாகிவிட்டதால் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டது. அதே மருத்துவமனையில் ஜனவரி 3ஆம் தேதி மற்றொரு குழந்தைக்குக் கண்டறியப்பட்டது. அந்த எட்டு மாத ஆண் குழந்தை தற்போது அங்குச் சிகிச்சை பெற்று வருகிறது. இப்போது இரு குழந்தைகளும் நல்ல நிலையிலேயே உள்ளன.
முன்னதாக முதல்வர் சித்தராமையா இது குறித்துக் கூறுகையில், "இரண்டு குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடன் தினேஷ் குண்டுராவிடம் பேசினேன். அவரும் தேவையான விளக்கங்களை அளித்தார். தேவையான ஆலோசனைகளை அவர் நடத்தி வருகிறார். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications