Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் நாளை பந்த்.. மாநிலத்தை முடக்கும் கன்னட அமைப்புகள்! ‛மெயின் டிமாண்ட்’ என்ன? முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கன்னட அமைப்பினர் பந்த் (முழு அடைப்பு) அறிவித்துள்ளனர். இதனால் நாளை கர்நாடகாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த பந்த் நாளை ஏன் நடத்தப்படுகிறது? கன்னட அமைப்பினர் கோரிக்கை என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

கர்நாடகாவில் பெலகாவி என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் என்பது கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் அமைந்துள்ளது. பார்டர் மாவட்டம் என்பதால் கன்னடம் மொழி பேசுவோரை போல் மராத்தி மொழி பேசும் மக்கள் ஏராளமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் பெலகாவிக்கு மகாராஷ்டிரா அரசு உரிமை கொண்டாடி வருகிறது.

karnataka bandh bandh karnataka

மொழி வாரி மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு பெலகாவி மாவட்டத்தின் பல பகுதிகள் மும்பை மாகாணத்துக்குள் இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் உருவானபோது பெலகாவி கர்நாடகாவுக்குள் வந்தது. தற்போதும் பெலகாவியில் சுமார் 800க்கும் அதிகமான கிராமங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளன.

கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே என்ன பிரச்சனை?

இதனால் அந்த 800 கிராமங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று அந்த நாடு கூறி வருகிறது. இதற்கு கர்நாடகா மறுப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே தான் பெலகாவி மாவட்டத்தில் அடிக்கடி எல்லை பிரச்சனை, மொழிப்பிரச்சனை என்பது ஏற்பட்டு பதற்றம் உருவாகும்.

அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா அரசு பஸ் ஒன்று பெலகாவியில் இருந்த பாலேகுந்திரி என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பெண் ஒருவர் மராத்தியில் பேசி டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரி, ‛‛எனக்கு மராத்தி மொழி தெரியாது. கன்னடத்தில் பேசுங்கள்'' என்று கூறினார். இது பிரச்சனையை ஏற்படுத்தியது. அப்போது மராத்தி மொழி பேசுவோர் கண்டக்டர் மகாதேவ் ஹுக்கேரியை தாக்கினர். இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

நாளை பந்த் - ‛டிமாண்ட்' என்ன?

இந்த சம்பவத்துக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெலகாவியில் போராட்டங்கள் வெடித்தது. இதனால் கர்நாடகா - மகாராஷ்டிரா இடையேயான பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து தான் நாளை பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக கன்னட ஒக்கூடா என அழைக்கப்படும் கன்னட கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்த கன்னட கூட்டமைப்பினர் இந்த பந்த் மூலம் கர்நாடகா அரசுக்கு முக்கிய கோரிக்கையை வைக்க உள்ளனர். அதாவது பெலகாவியில் கர்நாடகா மக்களுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்களும், மராத்தி மொழி பேசுவோரும் செயல்பட்டு வருகின்றனர். இது இருமாநில மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்த உள்ளது. குறிப்பாக பெலகாவியில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி பிரிவினையை தூண்டி பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மகாராஷ்டிரா ஏகிகிரண் சமிதி உள்பட பிற மகாராஷ்டிரா அமைப்புகளை மாநிலத்தில் தடை செய்ய வேண்டும். எல்லையோர கிராம கன்னட மக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பிரதானமாக உள்ளது.

பஸ் - ஆட்டோ - வாடகை கார் இயங்குமா?

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையான பெலகாவியில் கன்னட அமைப்பினர் கடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் இருமாநிலங்கள் இடையேயான போக்குவரத்து என்பது பாதிக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா அரசு பஸ்கள் நாளை கர்நாடகாவிற்கும் வராது. இந்த பந்த் போராட்டத்தையொட்டி பெலகாவி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

இந்த பந்துக்கு கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம், பெங்களூர் மாநகர போக்குவரத்து கழகங்களின் பணியாற்றும் ஊழியர்களின் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் நாளை கர்நாடகா அரசு பஸ், பெங்களூர் மாநகர அரசு பஸ்கள் இயங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஓலா,

உபர், கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ரிக்ஷா சங்கங்களும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார்கள் நாளை இயங்காது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் கன்னட திரைத்துறை, ஹோட்டல் துறையினரும் பந்த்துக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மூடப்படும். அதேபோல் பெட்ரோல் நிலையங்கள், வணிக வளாகங்களின் சேவைகளும் நாளை பாதிக்கப்படலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+