"சொட்டு தண்ணீர் இல்லை!" திணறும் பெங்களூர்.. உண்மையில் என்ன காரணம்! சம்மரை தாக்குப்பிடிக்க முடியுமா
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் திடீரென தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு உண்மையில் என்ன காரணம்., இதைச் சரி செய்வது எப்படி என்பதை வல்லுநர்கள் விளக்கியுள்ளனர்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே மிக மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சொகுசு ஏரியாக்களில் உள்ள வீடுகள் கூட நீர் இல்லாமல் திண்டாடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

இதனால் தண்ணீர் பயன்பாடு குறித்து கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த பஞ்சத்திற்கு என்ன காரணம்.. பெங்களூரில் இப்போது என்ன தான் நடக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பெங்களூர் பிரச்சினை: பெங்களூரின் திட்டமிடப்படாத வளர்ச்சி, உள்கட்டமைப்பு ஆகியவை தான் தண்ணீர் நெருக்கடியை மோசமாக்கியுள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணக்காரர்கள் ஏரியாவில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தியவர்கள் கூட, இப்போது தினசரி நீரைப் பார்த்துப் பார்த்து தான் செலவழிக்க வேண்டி இருக்கிறது. சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மணிக்கணக்கில் கூட தண்ணீர் இல்லாமல் இருக்கிறது.
இது குறித்து கேரளாவில் இருந்து பெங்களூருக்கு இடம்பெயர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், "நான் கேரளாவில் இருந்த பரம்பரை சொத்தை விற்றுவிட்டு பெங்களூருவில் ரூ.1 கோடிக்குக் கடனில் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கினேன். ஆனால், நிலைமை எதுவுமே மாறவில்லை. இதுபோல தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது" என்கிறார்.
நீர்ப் பற்றாக்குறை: பெங்களூர் நகரின் பெரும்பகுதி குடிநீர்த் தேவை காவேரி ஆற்றில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. இப்போது நகருக்குத் தினசரி 1,450 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆற்றில் இருந்து கிடைக்கிறது. ஆனால், இன்னும் அது நகரின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. கடந்த 3 ஆண்டுகளாகப் பெங்களூரைச் சுற்றியுள்ள காவேரி, தட்சிண பினாகினி போன்ற ஆறுகளில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களில் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு மழை குறைந்ததே நகரில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படக் காரணமாகும்.
மழை குறைந்தது ஒரு காரணம் என்றால் திட்டமிடப்படாத வளர்ச்சியும் மற்றொரு முக்கிய காரணமாகும். இத்தனை ஆண்டுகளில் நீர் மேலாண்மையை உறுதி செய்ய எந்தவொரு திட்டமிடலும் இல்லை.. நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதனால் நகர்ப்புறங்களில் பல ஆண்டுகளாக நிலத்தடி நீர் வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அதிவேக வளர்ச்சியும் பெங்களூர் இன்று எதிர்கொள்ளும் நீர்ப் பிரச்சினைக்குக் காரணமாகும்.
எந்த ஏரியா: பெங்களூரில் சமீபத்தில் வளர்ந்த பகுதிகளான வைட்ஃபீல்ட், சர்ஜாபுரா உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது அங்கே நீர் மேலாண்மை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. முன்பு பக்காவான நீர் மேலாண்மை திட்டத்துடன் கட்டப்பட்ட ஓல்ட் பெங்களூர் பகுதிகளான ஜெயாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரியளவில் நீர்ப் பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் மழை வரும் போது அதை சேமித்து வைப்பதும் அதை நிலத்தடி நீர் அதிகரிக்கப் பயன்படுத்தும் முறையும் அதிகரிக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த 2023 ஜூலை மாதம் பெங்களூரைச் சுற்றி இருக்கும் குளங்கள் குறித்த சர்வே ஒன்று வெளியானது. அதில் பெங்களூரைச் சுற்றி 31 குளங்கள் இருக்கும் நிலையில், அதில் 39 குளங்களில் தண்ணீர் குடிக்கவே முடியாத அளவுக்கு அதிக மாசடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
நகரமயமாக்கல்: கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் பெங்களூரில் நகரமயமாக்கல் சுமார் 1,055 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூரைச் சுற்றி இருக்கும் 79 சதவீத நீர்நிலைகளை மாயமாகி இருக்கிறது அல்லது கழிவுப் பொருட்கள் நிறைந்து ஆபத்தான ஒன்றாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் உள்ள சரக்கி ஏரி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 300 அடி உயர்ந்ததாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எனவே, பெங்களூர் நகரைச் சுற்றி இருக்கும் நீர் நிலைகளை மீட்டு அதை உரிய முறையில் பராமரித்தாலே போதும் பெங்களூரின் நீர் பற்றைக்குறையைச் சமாளிக்க முடியும். மேலும், புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் போது நீர் ஆதாரங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications