எருமையை இறைச்சிக்காக வெட்டும் போது பசுமாடுகளை வெட்ட கூடாதா? கர்நாடகா அமைச்சர் வெங்கடேஷ் கேள்வி
பெங்களூர்: இறைச்சிக்காக எருமையை வெட்டும் போது ஏன் பசு மாடுகளை வெட்டக் கூடாது என கர்நாடகா அமைச்சர் வெங்கடேஷ் கேள்வி எழுப்பி இருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கர்நாடகாவில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக ஆட்சியில் பசுவதை தடுப்பு சட்டம் ஒன்று பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் இடையே கொண்டுவரப்பட்டது. கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசின் இந்த பசுவதை தடுப்பு சட்டத்தை அப்போது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை கடுமையாக எதிர்த்த.

முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த பசுவதை தடுப்பு சட்டத்தின் சாரம்சம்: கர்நாடகாவில் பசுக்கள் விற்பனை, வேறு இடத்துக்கு கொண்டு செல்லுதல், கொல்லுதல் தண்டனைக்குரியது. பசுக்களுக்கு நோய் ஏற்பட்டால்தான் அனுமதியுடன் வெட்ட வேண்டும். பசுவதை அல்லது பசுகொலை குறித்து உயர் அதிகாரிகள் சோதனை நடத்தலாம்; பசுவதை குற்றம் உறுதியானால் 3 முதல் 5 ஆண்டு சிறை தண்டனை உறுதி; ரூ50,000 முதல் ரூ5 லட்சம் வரை அபராதம் விதிப்பு;
கர்நாடகாவில் ஏற்கனவே ஒரு பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தது. அதில் பசுவதை குற்றவாளிகளுக்கு 6 மாதம் சிறை, ரூ1,000 அபராதம் மட்டுமே இருந்தது. இதனையே முந்தைய பாஜக அரசு திருத்தி இருந்தது.

இந்நிலையில் கர்நாடகா தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போதைய காங்கிரஸ் அரசு பசுவதை தடை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர உள்ளது. இது தொடர்பாக மாநில கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் கூறியதாவது: கர்நாடகா விவசாயிகளின் நலனைக் கொண்டு பசுவதை தடை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. கர்நாடகாவில் இறைச்சிக்காக எருதுகளை வெட்டுகிற போது ஏன் பசு மாடுகளை வெட்டக் கூடாது? அதில் என்ன தவறு இருக்கிறது?. இவ்வாறு வெங்கடேஷ் கூறினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications