Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

23 டூ 24.. ஒரு பக்கம் மம்தா, மறுபக்கம் ஸ்டாலின்.. நேரடியாக பறந்த மெசேஜ்.. பாஜக ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்டும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட ட்வீட்டும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவிற்கு சவாலாக உள்ள இந்த இரு தலைவர்களுமே 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ்க்கு பின்னால் அணி சேர அதிக வாய்ப்பு உள்ளதாக இந்த ட்வீட்கள் சொல்கின்றன.

what were the direct messages send by mk stalin and mamata banarjee to the bjp over the karnataka election results?

கர்நாடகா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள், கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. மதியத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தான் அறுதிப்பெரும்பான்மை பெற போகிறது என்பது தெரியவந்தது.

தற்போது மாலை 4.15 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 129 இடங்களில் வெற்றி மற்றும் 7 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் 136 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 61 இடங்களில் பாஜக வெற்றி மற்றும் 2 இடங்களில் முன்னிலை என மொத்தம் பாஜக 64 இடங்களில் வெல்லும் நிலையில் இருக்கிறது, ஜேடிஎஸ் கட்சி (குமாரசாமியின் கட்சி)19 இடங்களில் வெற்றி ஒரு இடத்தில் முன்னிலை என 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரம் டிகே சிவகுமாரும் முதல்வர் ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி எடுக்கும் முடிவில் தான் யார் முதல்வர், யார் யார் துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என்பது தெரியவரும் என்கிறார்கள்.

what were the direct messages send by mk stalin and mamata banarjee to the bjp over the karnataka election results?

இன்று இரவு பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நாளை முடிவு எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு மாநில தலைவர்கள், முதல்வர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.

கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்!" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.

what were the direct messages send by mk stalin and mamata banarjee to the bjp over the karnataka election results?

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், கர்நாடாகவில் சர்வாதிகார அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான உத்தரவை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது நன்றி!! முரட்டுத்தனமான எதேச்சாதிகார மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது!! பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும் போது, அதை சர்வாதிகாரத்தால், தன்னிச்சையை அடக்கிவிட முடியாது: அதுதான் கதையின் தார்மீக, நாளைய பாடம் என்று கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்டும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்ட ட்வீட் பதிவும் சொல்ல வருவது என்ன வென்றால், பாஜக கண்டிப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவும் என்பதுதான். காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக திமுக உள்ள நிலையில், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 2024ல் இணைந்தால் பாஜகவிற்கு சவாலாக இருக்கும். ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். காங்கிரஸ் பின்னால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய இந்த வெற்றி உதவும் என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதேநேரம் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபடும் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+