நிலவில் லேண்டிங் ஆன பிறகு சந்திரயான் 3 என்ன செய்யும்.. எவ்வளவு தூரம் செல்லும்? விரிவான விளக்கம்
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் அடிப்பகுதியில் 3 குட்டி ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த ராக்கெட்டுகள் மூலம் மெதுவாக லேண்டர் தரையிறக்கப்படும் என்றும் அதன்பின்னர் சந்திரயான் 3 என்னவெல்லாம் செய்யும்? எவ்வளவு தூரம் செல்லும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மொத்தம் 40 நாட்கள் பயணம் செய்து சந்திரயான் விண்கலம் நிலவின் கால் பதிக்க இருக்கிறது. தற்போது 40 நாள் பயணத்தில் முக்கால்வாசி பயணத்தை சந்திரயான் நிறைவு செய்து விட்டது. வரும் 23 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நிலவின் சந்திரயான் விண்கலம் தரையிறங்க உள்ளது.

இந்தியா மட்டும் இன்றி உலகமே சந்திரயான் 3 விண்கலம் நிகழ்த்த போகும் இந்த சாதனையை உற்று பார்த்து வருகிறது. சந்திரயான் விண்கலத்தின் ரோவர் நிலவில் தரையிறங்கியபடி என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ளும், தரையிறங்கும் நிகழ்வு எப்படி நடைபெறும் என்ற விவர்ங்களை விரிவாக பார்க்கலாம். சந்திரயான் விண்கலத்தின் டிபூஸ்டிங் எனப்படும் உயரம் குறைப்பு பணியை சிறப்பாக முடிந்துள்ளது.
நிலவில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் லேண்டர் தற்போது சுற்றி வரும். சுற்றுப்பாதையில் இருந்து, ஒரு நொடிக்கு 2 கி.மீ. ஆக இருக்கும் லேண்டரின் வேகம், நிலவின் மேற்பரப்பைத் தொடும்போது பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுவிடும். நிலவில் தரையிறங்குவதற்கு லேண்டர் வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய சவாலாகும்.
இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவத்தில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை. லேண்டிங்கிற்கு முன்பாக நமக்கு போதுமான அவகாசம் உள்ளது. இந்த நேரத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சந்திரயான் 2-வை ஒப்பிடும் போது சந்திரயான் 3 பல அட்வான்ஸ்டு தொழில் நுட்பத்தை கொண்டது. தவறுகள் ஏற்படும் அபாயத்தை சமாளிக்கும் வகையிலேயே இஸ்ரோ இந்த விண்கலத்தை தயாரித்து இருக்கிறது.
லேண்டரின் அடிப்பகுதியில் 3 குட்டி ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அந்த ராக்கெட்டுகள் மூலம் மெதுவாக லேண்டர் தரையிறக்கப்படும். அதற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து லேண்டரில் இருந்து ஒரு சாய்வுபலகை அமைப்பு வெளிவரும். அதில் இருந்து 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்து நிலவில் கால் பதிக்கும். இந்த ரோவர் 14 நாட்கள் நிலவில் ஆய்வுப்பணியில் ஈடுபடும்.
விண்கலத்தின் விக்ரம் லெண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிரங்கிய பிறகு அது தனது வரையறுக்கப்பட்ட பகுதிகளில் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். உலகின் எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் இதுவரை ஆய்வு மேற்கொண்டது இல்லை. இந்த அரிய சாதனையை இஸ்ரோ நிகழ்த்த உள்ளது.
நிலவின் தென் துருவத்தில் காணப்படும் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான் 3 விண்கலம் கண்டறியும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிலவில் உள்ள தண்ணீரை கண்டறியும் பட்சத்தில் அதில் இருந்து ஆக்சிஜனை உருவாக்க முடியும்" என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications